Cinema News
நான் சரக்கடிக்கறத நிறுத்த காரணமே அவர்தான்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ராதாரவி!..
பொதுவாக நாட்டில் பலருக்கும் மது அருந்தும் பழக்கம் உண்டு. அதிலும், சினிமாத்து|றையில் இந்த பழக்கம் பலருக்கும் இருக்கும். மதுப் பழக்கம் இல்லாதவர் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அதற்கு அவர்களின் தொழிலும் ஒரு காரணம். கலைஞர்களுக்கு மதுப்பழக்கம் என்பது நாடக காலத்திலிருந்தே இருக்கிறது.
கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே பல நடிகர்களுக்கும் மதுப்பழக்கம் இருந்தது. இதில், எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர் போன்ற வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு. சிவாஜிக்கும் மதுப்பழக்கம் இருந்தது. அதேபோல், எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பின் ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுக்கும் இந்த பழக்கம் இருந்தது.
இதையும் படிங்க: ஒத்த ஆளா களமிறங்கிறதுல தலைவர் கில்லி தான்… இந்த வார தமிழ் ஓடிடி ரிலீஸ்…
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலில் நடிக்கும் நடிகர்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜாலியாக நேரம் போக்க மதுவை தேர்ந்தெடுப்பார்கள். நடிகர்கள் மட்டுமல்ல. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரும் இதில் அடக்கம். அதேபோல், சினிமா உலகில் அடிக்கடி பார்ட்டிகள் நடக்கும். பிறந்தநாள், படத்தின் வெற்றி என பல காரணங்களை சொல்லி பார்ட்டி செய்வார்கள். அதில் மது கரைபுரண்டு ஓடும்.
இந்நிலையில், மதுப்பழக்கத்தை விட்டது பற்றி நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி 80களிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவில் இவரின் அனுபவம் 40 வருடங்களுக்கும் மேல். நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இப்போதும் டப்பிங் யூனியனுக்கு இவர்தான் தலைவர்.
இதையும் படிங்க: ரியாக்சனே காட்டாத விநியோகஸ்தர்கள்…. ராமராஜன் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா?
நடிகர் விஜயகாந்துக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கியவர். ரஜினியுடன் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக ஓப்பனாக பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் அதிமுக கட்சியில் இணைந்து தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் செய்து வந்தேன்.
அதேபோல், அதிமுக கூட்டங்களிலும் பேசுவேன். மீட்டிங் முடிந்த பின் சாலை ஓரங்களில் காரை நிறுத்திவிட்டு கட்சிகாரர்களுடன் மது அருந்தும் பழக்கம் எனக்கு இருந்தது. இது ஜெயலலிதா அம்மாவிற்கு தெரிந்துவிட்டது. ஒருநாள் என்னை அழைத்து ‘நான் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என நினைத்தால் இந்த பழக்கத்தை விட்டுவிடுங்கள்’ என சொன்னார். அதோடு மதுப்பழக்கத்தை விட்டுவிட்டேன்’ என ராதாரவி சொல்லி இருக்கிறார்.