ரியாக்சனே காட்டாத விநியோகஸ்தர்கள்.... ராமராஜன் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா?
மக்கள் நாயகன் ராமராஜனிடம் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கண்டார்கள். அதில் 'சொப்பனசுந்தரியோட காமெடி இன்னைக்கு வரைக்கும் பல படங்களில் ரீல்ஸா வருது. இது பற்றி நீங்க என்ன சொல்றீங்க?'ன்னு கேட்டார். அதற்கு ராமராஜன் சொன்ன பதில் இதுதான்.
'இந்த சீன் வீரப்பனோட காமெடி டிராக். இது உண்மையிலேயே நல்ல காமெடி. இதுல என்ன பெரிய விஷயம்னா கரகாட்டக்காரன் படத்தோட பிரிவியு ஷோ மூவி பாரடைஸ் தியேட்டர்ல போட்டாங்க. பர்ஸ்ட் ஆப்ல யாருமே சிரிக்கல. விநியோகஸ்தர், பிரபலங்கள்னு 150 பேரு இருந்தாங்க. யாருமே சிரிக்கல. அண்ணன் பையன் வந்துருந்தான். என்ன சித்தப்பு யாருமே சிரிக்கலன்னு கேட்டான். அப்போ நான் சொன்னேன். இங்கே யாரும் சிரிக்க மாட்டாங்க.
சிரிச்சா அது வேற மாதிரி பிசினஸ்க்கே பிராப்ளம்னு சிரிக்க மாட்டாங்க. நாளைக்கு கிருஷ்ணவேணில பாரு'ன்னு சொன்னேன். 'சினிமா எப்படி இருக்குன்னு பாருங்க. ஆனா அதே படத்தை ரிலீஸ் அன்னைக்கு கிருஷ்ணவேணில பார்த்தேன். துள்ளிக்குதிச்சிட்டாங்க. படம் முழுவதும் குதிக்க ஆரம்பிச்சிட்டாங்க.' என்றார் ராமராஜன்.
இவ்வளவுக்கும் கரகாட்டக்காரன் படத்தில் அந்த 'வாழைப்பழ காமெடி', 'சொப்பன சுந்தரி', 'காரில் இருந்து கழண்டு ஓடும் டயர்', 'பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்' என்று வருபவரிடம் 'காரைப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கித் தாங்கண்ணே'ன்னு கேட்கும் செந்தில் என பல சரவெடி காமெடிகள் முதல் பாதியில்தான் வரும். ஆனாலும் விநியோகஸ்தர்கள், பிரபலங்கள் என யாரும் சிரிக்காமல் வாயைப் பூட்டுப் போட்டுக் கொண்டா இருந்தார்கள் என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
இதையும் படிங்க... வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!..
கவுண்டமணி ஒரு தடவை இப்படி சொன்னாராம். 'என்ன இன்னைக்கு ஹீரோ வாராங்க. படம் பண்றாங்க. வருஷத்துக்கு ஒரு படம்னு சொல்றாங்க. ராமராஜனும் நானும் பேக் டு பேக் எத்தனை படம் ஹிட் கொடுத்துருக்கோம்னு தெரியுமா?' என கேட்டாராம்.