ரெண்டு டீம்! எவ்ளோ பிஸியா இருந்தாலும் இத கண்டிப்பா செய்யனும்.. சூர்யா வீட்ல இப்படி ஒரு கண்டீசனா

Published on: May 25, 2024
jothi
---Advertisement---

Actress Jyothika: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமான ஜோதிகா தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என இவர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் மக்கள் மனதில் ஒரு நிலையான நடிகையாக ஒரு பெரிய அந்தஸ்தை பெற்றார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. சினிமாவில் ஒரு நல்ல உயரத்தில் இருக்கும்போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள் என கவனித்து வந்த நிலையில் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மறுபடியும் ஒரு கம் பேக் கொடுத்தார்.

இதையும் படிங்க: கோபியை வச்சு செய்யும் ராதிகா, ஈஸ்வரி… மீண்டும் புது பிரச்னையில் சிக்கிய பாக்கியா…

அதைத் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். தமிழ், ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் ஒரு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜோதிகா. இந்த நிலையில் ஜோதிகா அவருடைய குடும்பத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்த ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

அதில் சூர்யாவின் வீட்டில் எப்பொழுதும் பெண்கள் ஒரு டீம் ஆகவும் ஆண்கள் ஒரு டீமாகவும் தான் இருப்பார்களாம். சூர்யாவை பொருத்தவரைக்கும் இரு டீம்களுக்கும் பொதுவானவராக இருப்பாராம். சூர்யா ஜோதிகா கார்த்தி என அனைவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருப்பார்கள். சிவக்குமார் சொற்பொழிவில் பிஸியாக இருப்பார். யார் என்ன பிசியாக இருந்தாலும் மதிய உணவு இரவு உணவு என இரு வேலைகள் கண்டிப்பாக ஒன்றாக உட்கார்ந்தான் சாப்பிட வேண்டும். இது சூர்யா வீட்டில் இருக்கும் ஒரு ரூல். எங்கிருந்தாலும் இந்த இரண்டு வேலைகள் நாங்கள் ஒன்றாக இருந்து சாப்பிடுவோம் என ஒரு பேட்டியில் ஜோதிகா கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: மேல ஏறிடுச்சி படவை!.. மாராப்பையும் விலக்கி அழகை காட்டும் மடோனா சிருஷ்டி டாங்கே!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.