Cinema History
கமலின் சூப்பர்ஹிட் படங்களில் நடிக்க மறுத்த சத்யராஜ்… அந்தப் படத்துக்கு மட்டுமாவது ‘ஓகே’ சொல்லியிருக்கலாமே..!
விருமான்டி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் சத்யராஜ் நடிக்கவில்லையாம். இது ஏன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.
விருமான்டி படத்தில் நெப்போலியன் நடித்த பாத்திரத்தில் நடிப்பதற்குத் தான் கமல் சத்யராஜை அழைத்தாராம். அந்தக் கதாபாத்திரம் தனக்கு சவாலானதாக இருக்காது என்று சத்யராஜ் கூறிவிட்டாராம். அது மட்டுமல்லாமல் நேராக கமல்ஹாசனின் அலுவலகத்துக்கே சென்று விட்டாராம் சத்யராஜ். அங்கு போய், காக்கி சட்டை மாதிரி இது ஒரு நல்ல பாத்திரமா இல்ல. அதனால இந்தத் தடவை வேண்டாம். நிச்சயமாக அடுத்த படத்தில் நடிக்கிறேன்னு கமலிடம் சொல்லி விட்டுத் திரும்பி வந்தாராம்.
இதையும் படிங்க… சுயநலவாதியான சூர்யா! இப்படி ஒரு காரியத்தை செய்வாருனு நினைக்கல.. ஆதங்கத்தில் பிரபலம்
வேட்டையாடு விளையாடு படத்தில் பிரகாஷ்ராஜ் ஏற்ற பாத்திரத்தில் நடிக்கத் தான் சத்யராஜிக்கு அழைப்பு வந்ததாம். அதில் நடிப்பதற்கும் அவருக்கு அவ்வளவாக விருப்பமில்லையாம். அதனால் தான் தவிர்த்து விட்டாராம்.
அந்த இரு படங்களிலும் நடிக்காததற்கு சத்யராஜிக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. ஆனால் கமலின் இன்னொரு படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. அதைத் தவற விட்டதற்குத் தான் ரொம்பவே வருந்தியிருக்கிறார் சத்யராஜ்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு உருவான காலகட்டத்தில் ஒரு சரித்திரப் படத்தைக் கமல் உருவாக்குவதாக இருந்தார். அதில் வில்லனாக நடிக்க சத்யராஜிக்கு அழைப்பு கொடுத்தார். அப்போது தான் பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருந்தார் சத்யராஜ். இப்ப தான் ஹீரோவா நடிக்கிறேன். திரும்பவும் வில்லனா நடிச்சா எனக்கு சறுக்கல் வந்து விடுமோ என சத்யராஜ் கேட்க, ஒரு நல்ல நடிகன் இதெல்லாம் சொல்லக்கூடாது என்றாராம் கமல்.
இதையும் படிங்க… ஸ்ரீதேவியின் மகளுக்கு கொக்கி போட்ட சிலம்பரசன்… கூடவே இந்த சூப்பர்ஸ்டாருமாம்… ரைட்டே…
ஆனாலும் கொஞ்சம் தயங்கினாராம் சத்யராஜ். அதனால் தான் அந்த வேடத்தில் நடிக்கவில்லையாம். அது ஒருபுறம் இருந்தாலும் கமலும் அந்தப் படத்தை எடுக்கவில்லையாம். அன்று நான் மட்டும் ஒப்புக்கொண்டு இருந்தால் ஒருவேளை அந்தப் படத்தைக் கமல் எடுத்திருப்பார் என்கிறார் சத்யராஜ். தமிழ்சினிமாவில் அது ஒரு வித்தியாசமான படமாக அமைந்திருக்கும் என்ற வருத்தம் சத்யராஜிக்கு இன்று வரை இருக்கிறது என்கிறார் சித்ரா லட்சுமணன்.