ஸ்ரீதேவியின் மகளுக்கு கொக்கி போட்ட சிலம்பரசன்… கூடவே இந்த சூப்பர்ஸ்டாருமாம்… ரைட்டே…

by Akhilan |   ( Updated:2024-05-25 01:58:39  )
ஸ்ரீதேவியின் மகளுக்கு கொக்கி போட்ட சிலம்பரசன்… கூடவே இந்த சூப்பர்ஸ்டாருமாம்… ரைட்டே…
X

Silambaraan: மீண்டும் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்து அப்டேட்கள் வரிசையாக வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த ஸ்பெஷல் அப்டேட் தற்போது லீக்காகி இருக்கிறது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்த சிலம்பரசன் தன்னுடைய கேரியரில் மிகப்பெரிய தொய்வை சந்தித்தார். இனிமேல் அவருடைய நடிப்பு வாழ்க்கை அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டிருக்கும் போது உடம்பை குறைத்து மாநாடு படத்தில் என்ட்ரி கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

இதையும் படிங்க: கோபியை வச்சு செய்யும் ராதிகா, ஈஸ்வரி… மீண்டும் புது பிரச்னையில் சிக்கிய பாக்கியா…

வெகு நாட்களுக்குப் பிறகு அவர் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது மாநாடு திரைப்படம்.தொடர்ச்சியாக, பத்து தல, வெந்து தணிந்தது காடு என சொல்லிக் கொள்ளும்படியான ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இதை தொடர்ந்து மீண்டும் சிம்பு கோலிவுட்டில் பிரபல நடிகராக வளர தொடங்கினார். அவர் நடிப்பில் தற்போத STR48 உருவாகி வருகிறது.

இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. வரலாற்று கதையாக உருவாகும் இப்படம் இரண்டு பாகமாக இயக்கப்பட இருக்கிறது. சிலம்பரசன் இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேடங்களை அவரே செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிகிறது.

இதையும் படிங்க: ரெண்டு டீம்! எவ்ளோ பிஸியா இருந்தாலும் இத கண்டிப்பா செய்யனும்.. சூர்யா வீட்ல இப்படி ஒரு கண்டீசனா

இது உறுதியாகும் பட்சத்தில், கோலிவுட்டில் முதல்முறையாக ஜான்வி கபூர் அறிமுகமாக இருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கும் முக்கிய கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கிசுகிசுக்கிறது. முதற்கட்ட பணிகள் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புக் கொடுத்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story