Cinema History
எம்ஜிஆர் கொடுத்த முத்தம்… ரெண்டு நாளா முகத்தைக் கழுவாமல் இருந்த நடிகை..!
தமிழ்ப்படங்களில் வரும் முத்தக்காட்சிகள் குறித்து பிரபல பத்திரிகையாளர் சபீதா ஜோசப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்சினிமா உலகில் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடலில் தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர் முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரிக்கு முத்தம் கொடுப்பார். சந்திரலேகாவில் உள்ள ஒரு காட்சியில் கட்டிப்பிடிக்கும்போது டி.ஆர்.ராஜகுமாரி அப்படியே நழுவுவார்களாம்.
அந்த சீனுக்காகவே பாரதிராஜா 3 தடவை பார்த்தார்களாம். அந்த சீனைத் தான் கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமணி ராதிகாவைப் பிடிக்கும்போது அதே போன்று நழுவ விடுவாராம். காதல் மன்னன் ஜெமினிகணேசன் கூட முத்தம் கொடுத்துப் படங்களில் நடிக்கவில்லை. அவர் ஜாலியாக ஓடிக் கொண்டு காதல் செய்வார். காதல் இளவரசன் கமல். அவர் குருவிற்கு மிஞ்சிய சிஷ்யன். சிவாஜி தான் முத்தக்காட்சிகளில் மன்னாதி மன்னன்.
சிவாஜி கணேசன் நடிகையின் உடலில் ஒத்தடம் கொடுப்பது போல முத்தம் கொடுப்பார். பாடல் காட்சிகளில் கை, உள்ளங்கை, புறங்கை, கழுத்து, தோள்பட்டை, காது மடல், முதுகு என பல இடங்களில் போகிற போக்கில் முத்தம் கொடுப்பார். சிவாஜி தான் கழுத்தில் முத்தம் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். அவரது சிஷ்யர் கமல் முத்தம் என்றாலே லிப் லாக் தான்.
புன்னகை மன்னன் படத்தில் கமல் ரேகாவை எமோஷனலாக பரபரப்புடன் முத்தம் கொடுப்பார். மகாநதியில் சுகன்யாவுடன் லிப் லாக், கவுதமிக்கு தேவர் மகன் படத்தில் லிப் லாக் என முத்தக்காட்சிகளில் புகுந்து விளையாடுவார். ரஜினி, எம்ஜிஆர் கூட முத்தக்காட்சிகளைப் பெரிதும் விரும்ப மாட்டார்கள். அதே போல முத்தக்காட்சிகளும், குளியல் காட்சிகளும் சினிமாவுக்கு அவசியமாகி விட்டது.
சத்யராஜ் ஒரு சில படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்திருப்பார். ஒரு சமயம் நடிகை ராதிகா மாணவியாக இருக்கும் போது சூட்டிங் பார்க்க வருவாராம். ஒருமுறை எம்ஜிஆரைப் பார்க்க வந்தாராம். அவரை நேரில் பார்ப்பதற்கே அந்தக் கலரும், அழகும் அவ்வளவு பிரமிப்பாக இருந்ததாம்.
அவரிடம் எம்ஆர்.ராதா மகள் என்றதும் அவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாராம். அது எம்ஜிஆரே கொடுத்தால் 2 நாள் முகத்தைக் கழுவவே இல்லையாம். அவருடைய முத்தம் போய pடும்னு அப்படி கழுவாமலேயே இருந்து விட்டாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.