Cinema History
எத்தனை படம் பண்ணினாலும் லைஃப்லயே மறக்க முடியாத படம் இதுதான்… இயக்குனர் லிங்குசாமி
2002ல் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான படம் ரன். படத்தை இயக்கியவர் லிங்குசாமி. இசை அமைத்தது வித்யாசாகர்.
ரன் மாதிரி ஒரு படம் வேணும்னு எங்கே போனாலும் கேட்டுக்கிட்டே இருப்பாங்கன்னு இயக்குனர் லிங்குசாமி சொல்கிறார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னாடி என்ன காரணம் என்று இசை அமைப்பாளர் வித்யாசாகரும், இயக்குனர் லிங்குசாமியும் கலந்துரையாடுகிறார்கள். வாங்க பார்ப்போம்.
எத்தனை படம் பண்ணினாலும் லைப்ல மறக்க முடியாத படம் ரன். நான் எங்கே போனாலும் ரன் மாதிரி பண்ணுங்க சார்னு சொல்வாங்க. என்கிறார் லிங்குசாமி. அந்தப் படத்தின் கதை சொல்லி இன்டர்வல் பிளாக் சொல்லும்போதே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும்னு நான் சொன்னேன் என்கிறார் இசை அமைப்பாளர் வித்யாசாகர்.
‘தேரடி பாடல் எங்கே எடுத்தீங்க?’ன்னு என்னைக் கேட்பாங்க என்கிறார் லிங்குசாமி. அந்தப் படத்துல ஒவ்வொரு பாட்டும் அப்படி அமைஞ்சது. எங்கிட்டயும் ரன் மாதிரி ஒரு படத்துக்குப் பாடல் பண்ணுங்கன்னு சொல்றாங்க.
அந்தப் படம் ஒரு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. காலம் கடந்தும் கூட பலரது மனசில் இடம்பெற்றுள்ளது என்கிறார். இன்றும் கூட தெலுங்கு திரையுலகில் ரன் படத்தைப் பற்றி பிரபாஸ், அல்லு அர்ஜூன் என எல்லாரும் கேட்குறாங்க என சிலாகிக்கிறார் லிங்குசாமி.
முதல் முறை இந்தப் படத்துக்கு 5 பாடலாசிரியர்கள். எடுத்த எல்லா முயற்சிகளுமே வெற்றி பெற்றது மறக்க முடியாதது. உங்களோட பொய் சொல்லக் கூடாது காதலி பாடல் நல்ல வரவேற்பு கிடைச்சது. உங்களுக்கும் பாடல் வரிகளில் நல்ல ஆளுமை இருந்துருக்கு என்று நெகிழ்கிறார் லிங்குசாமி.
அப்போது வித்யாசாகர் நீங்களும் ஹைக்கூ கவிஞரா இருந்துருக்கீங்க. ரசனை, இசை மேல் உங்களுக்கு உள்ள ஆர்வம், தமிழ் மீதுள்ள தாகம் எல்லாமே ஒண்ணா சேர்ந்து விட்டது. பழனிபாரதி, பா.விஜய், விவேகா என எல்லாருமே வளர்ந்து வரும் கவிஞர்கள். இவர்களுடன் அறிவுமதியும் எழுதி இருந்தார். அவர்கள் எல்லாருக்குமே பாடல்கள் ஒரு அடையாளம் கொடுத்தது என்கிறார் வித்யாசாகர்.
அதே போல பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு தேரடி பாடலை எழுதிய பிறகு குறைந்தபட்சம் 35 படங்களுக்கு ஓபனிங் சாங் எழுதும் வாய்ப்பு வந்ததாம். அவரு எங்கிட்ட சொன்னாரு என்கிறார் லிங்குசாமி.
‘தேரடி’ பாடலுக்கு மியூசிக் கம்போஸ் பண்ணும்போது பாடல் வரிகளை எழுதிக் கொடுங்கன்னு முத்துக்குமார்கிட்ட கேட்டேன். அதுல கடைசி ரெண்டு வரி ‘வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே…’ ன்னதும் இதுதான் பாடலோட ஹைலைட்டா இருக்கப் போகுதுன்னு முடிவு பண்ணினேன்.
இதையும் படிங்க… லோகேஷ் கனகராஜ் பண்ண வேலை!.. சிக்கலில் சிக்கித் தவிக்கும் விஜய்.. அதுக்காகத்தான் இத்தனை பேரா?..
அப்புறம் அங்கிருந்து தொடங்கி தான் பல்லவிக்குப் போனோம் என்று லிங்குசாமி சொன்னதும், எல்லாருக்குமே ஒரு விஷயத்தைப் ப்ரூவ் பண்ணனும். நமக்குன்னு வெற்றியைக் கொடுக்கணும்னு ஒரு வெறி இருக்கும். அது தான் இந்தப் படத்துல நடந்தது என்கிறார் வித்யாசாகர். கம்போசிங்கிலேயே 10 பேரை வச்சிக்கிட்டு எல்லாரிடமும் கருத்தைக் கேட்போம். வேடிக்கையா நடந்தது. ஆனா ரொம்ப விசேஷம் என சிலாகிக்கிறார் அவர்.