Cinema News
நான் நடிச்ச சீன் படம்!. என் தம்பி பாத்துட்டு என்ன பண்ணான் தெரியுமா?!.. ஷகீலா சொன்ன பகீர் தகவல்!..
கிளுகிளுப்பு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானர் நடிகை ஷகிலா. உருதும், தெலுங்கும் பேசும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் இவர். மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் அதுவே அவருக்கு பழகிவிட்டது. அவ்வப்போது தமிழிலும் சில படங்களில் நடித்தார் ஷகீலா.
ஒருகட்டத்தில் மலையாள நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்களை விட ஷகீலா படங்களுக்கு அதிக வசூல் வந்தது. இதனால் கோபப்பட்ட மம்முட்டி ‘ஷகீலா படங்கள் இனிமேல் கேரளாவில் ஓடக்கூடாது’ என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு ஷகீலாவின் திரை வாழ்வை முடக்கினார்.
இதையும் படிங்க: கார்த்திக்கிடம் இருக்கிற ஒரே பிரச்சினை இதுதான்! குளிர்ல என்ன நடந்துச்சு தெரியுமா? மீனா சொன்ன சீக்ரெட்
அதன்பின், தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். ஷகீலாவுக்கு ஏற்ற மாதிரி கிளுகிளுப்பான வேடங்களையே கோலிவுட் இயக்குனர்கள் கொடுத்து வருகிறார்கள். ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அதோடு ஒரு திருநங்கையை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.
மேலும், ஆங்கராக மாறி யுடியூப் சேனலுக்காக சர்ச்சையில் சிக்குபவர்களை பேட்டியெடுத்து வருகிறார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கு சமையல் நன்றாக தெரியும் என நிரூபித்து வெற்றியும் பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகீலாவுக்கு என ரசிகர்களே உருவாகிவிட்டனர்.
இதையும் படிங்க: நீ இதை செஞ்சிருந்தா நான் வந்திருப்பேன்!.. ராமராஜனிடம் கோபப்பட்ட இளையராஜா!. சாமானியன் பிளாஷ்பேக்!..
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஷகீலா ‘சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் காட்சி என் வாழ்வில் அப்படியே நடந்திருக்கிறது. என் தம்பி ஒருமுறை பைக்கை எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி சென்றான். அப்போது அங்கு நண்பர்களுடன் சேர்ந்து புளு பிலிம் பார்த்திருக்கிறான். அதில் நான் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியாகி அழுது கொண்டே பைக்கை எடுத்துக்கொண்டு சென்னை வந்துவிட்டான்.
3 நாட்கள் அவனுக்கு காய்ச்சல் இருந்தது. என்னாச்சி என நான் விசாரித்தபோது ‘நீ இதுபோன்ற படங்களில்தான் நடிக்கிறாயா?’ என கேட்டு அழுதான். ஆமாம். நான் நடிப்பது கிளாமர் படங்கள்தான் இதுதான் என் கேரியர்’ என பொறுமையாக சொல்லி அவனுக்கு புரிய வைத்தேன்’ என ஷகீலா சொல்லி இருக்கிறார்.