கார்த்திக்கிடம் இருக்கிற ஒரே பிரச்சினை இதுதான்! குளிர்ல என்ன நடந்துச்சு தெரியுமா? மீனா சொன்ன சீக்ரெட்

Karthik Meena: 80கள் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு காதல் மன்னனாக நவரச நாயகனாக அனைத்துப் பெண் ரசிகர்களையும் கவர்ந்த கள்வனாக இருந்தவர் நடிகர் கார்த்திக். அனைவரையும் கவர்ந்து சூப்பர் ஹீரோவாக ஹேண்ட்ஸமான ஹீரோவாக அந்த காலகட்டத்தில் வலம் வந்தார் கார்த்திக். அவரிடம் மயங்காத நடிகைகளே இல்லை என்று சொல்லலாம்.

அவர் மீது காதல் வயப்பட்ட நடிகைகள் ஏராளம் என்று பல பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு இருக்கிறது. அவர் ஒரு பிளேபாயாகத்தான் அந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறார் கார்த்திக். இந்த நிலையில் கார்த்திகை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை மீனா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கார்த்திக் இடம் இருக்கிற ஒரே பிரச்சனை அதிகாலை ஷூட்டிங் என்றால் அவர் வராமல் இருப்பார்.

இதையும் படிங்க: நீ இதை செஞ்சிருந்தா நான் வந்திருப்பேன்!.. ராமராஜனிடம் கோபப்பட்ட இளையராஜா!. சாமானியன் பிளாஷ்பேக்!..

முதல் நாள் ஷூட்டிங் முடிந்து போகும் போதே என்னிடம் சன் செட்டும் சன் ரைஸும் ஒன்றுதானே? ஒரே மாதிரி தானே இருக்கும் என கேட்டுவிட்டு தான் போவாராம். அப்போதே மீனாவுக்கு தெரிந்து விடுமாம். நாளைக்கு மனுஷன் ஷூட்டிங்கிறகு லேட்டா தான் வருவார் என்று. அந்த அளவுக்கு அதிகாலை சூட்டிங் என்றால் அவர் எழுந்திருக்கவே மாட்டார் என கூறினார்.

அதுபோல அரிச்சந்திரா பட சூட்டிங்கின் போது சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். அங்கு மிகவும் குளிராக இருந்ததாம். இத்தனைக்கும் கார்த்திக்கு ஜெர்கின் எல்லாம் அணிந்து கொண்டு தான் இருந்தாராம். படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் குளிரை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் மீனாவின் அம்மா சுட சுட அனைவருக்கும் ரசம் சோறு சமைத்துப் பரிமாறினாராம். அதிலிருந்து மீனாவின் அம்மா மீது கார்த்திக்குக்கு மிகவும் மரியாதையாம். இப்பொழுது பார்த்தால் கூட அந்த ரசத்தை ஞாபகப்படுத்தி தான் கார்த்திக் கேட்பார் என மீனா கூறினார்.

இதையும் படிங்க: கோட் திரைப்படம் இரண்டாவது முறை தான்… இதுக்கு முன்னரே அந்த படத்திலும் விஜய் இதை செஞ்சிருக்கார்…

 

Related Articles

Next Story