விஜய் செய்த வேலை!.. போட்டோவை பகிர்ந்த எஸ்.ஏ.சி!.. முழு அரசியல்வாதியாகவே மாறிட்டாரு!..

Published on: May 27, 2024
---Advertisement---

Vijay: நடிகர் விஜய் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகரின் மகன். ஆனால் தற்போது விஜய் பெற்றோருடன் இல்லை என்றாலும் அவ்வப்போது மூவரும் பார்த்துக்கொள்ளும் புகைப்படம் வெளியாகி வைரலாகும். தற்போது மீண்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

எண்பதுகளில் கோலிவுட் பிரபல இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ சந்திரசேகர். இவரின் ஒரே மகன்தான் நடிகர் விஜய். முதலில் இவரை நடிகராக சந்திரசேகர் விரும்பவில்லை.  விடாப்பிடியாக இருந்து அண்ணாமலை காட்சியை நடித்துக் காட்டி தந்தையிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கியவர் நடிகர் விஜய்.

இதையும் படிங்க: கோட் திரைப்படம் இரண்டாவது முறை தான்… இதுக்கு முன்னரே அந்த படத்திலும் விஜய் இதை செஞ்சிருக்கார்…

விஜயை வைத்து தொடர்ச்சியாக 7 படங்களை இயக்கி இருந்தார் எஸ்ஏ சந்திரசேகர். பின்னர் தனக்குத் தெரிந்த பிரபலங்களிடம் விஜய்யிற்காக வாய்ப்பு கேட்டு அலைந்த சம்பவங்களும் நடந்தது. துப்பாக்கி படத்திற்கு முன்னர் வரை விஜய்யின் படத்திற்கான கதையை கேட்டது அவரின் தந்தையான எஸ் ஏ சி தான். ஒரு கட்டத்தில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான பிரச்சினைகள் தலைதூக்க எஸ் ஏ சி மற்றும் ஷோபா இருவரும் தனி வீட்டில் வசிக்க தொடங்கினர்.

அப்போதில் இருந்து விஜய் இருவரையும் வந்து பார்த்துவிட்டு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். கடைசியாக சந்திரசேகருக்கு ஆபிரேஷன் நடந்து இருக்கும் அப்போது விஜய் வந்து சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் மீண்டும் பெற்றோரை சந்தித்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் அரசியலில் இறங்கி இருக்கும் நிலையில், மக்களிடம் நல்ல பேர் எடுக்கவே விஜய் இதை செய்திருப்பதாக சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதல்ல ரெண்டுனீங்க.. இப்போ மூணா? ‘கோட்’ படம் பற்றி புதிய அப்டேட்! படமுழுக்க விஜய்தானா?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.