அடக் கொடுமையே! ‘ராயன்’ படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?

Published on: May 28, 2024
rayan
---Advertisement---

Rayaan Movie: தமிழ் சினிமாவில் நடிப்பில் இப்போது பட்டைய கிளப்பி வரும் நடிகர் தனுஷ். ஒரு நடிப்பு அரக்கனாகவே இன்று தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்காக மெனக்கிட்டு வருத்தி நடிப்பதில் வல்லவராக மாறி இருக்கிறார் தனுஷ். அதுவும் அசுரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த படமாக அமைந்தது.

மேலும் அந்தப் படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தனுஷுக்குள்ளும் இப்படி ஒரு மகா நடிகன் இருக்கிறானா என்ற ஒரு ஆச்சரியத்தை வரவழைத்தது. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து ஒரு நல்ல கதை களத்தோடு பல படங்களை கொடுத்து வரும் தனுஷ் அடுத்ததாக அவரே இயக்கிய நடிக்கும் திரைப்படம் ராயன்.

இதையும் படிங்க: தனுஷூக்கு வில்லன் S.K. இவருக்கு வில்லன் யாரா இருக்கும்? பிரபலம் போடும் ரூட் இதுதான்..!

இந்தப் படம் ஜூன் 13ஆம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்த ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்ற ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. ஜூன் 13 ரிலீஸ் என சொன்னதும் ஜூன் இரண்டாம் தேதி அதனுடைய இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்றும் கூறப்பட்ட வந்தது. ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் இப்பொழுது இசை வெளியீட்டு விழாவையும் தள்ளி வைப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.

ரிலீஸ் தேதி தள்ளி போவதற்கான காரணம் படத்தில் ஏஆர் ரஹ்மான் ரி ரிக்கார்டிங் முடிக்க கொஞ்சம் தாமதமாகும் என சொன்னதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் அந்த படத்தை போட்டு பார்த்திருக்கின்றனர் படக் குழு. அப்போது சில காட்சிகளில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாததால் மீண்டும் ரீசூட் எடுப்போம் என்ற நிலைமைக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ ரஞ்சனியை நியாபகம் இருக்கிறதா? இப்ப என்ன செய்றார் பாருங்க

ரீ சூட் எல்லாம் முடிந்து அதன்பிறகு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் ஜூன் 13 ஆம் தேதி ராயன் திரைப்படம் வெளியாகாது என்ற இந்த செய்தி பரவி வருகின்றன. இப்பொழுது இந்த தேதியை விட்டு விட்டால் இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி பார்க்கும் போது ராயன்  திரைப்படத்தின் ரிலீஸ் எப்பொழுது என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.