மணிரத்னம் படத்தையே தூக்கிப் போட்ட மானஸ்தன்!.. மம்மூட்டி மகன் அடுத்த படம் எப்போ வருது தெரியுமா?..

Published on: May 29, 2024
---Advertisement---

தனுஷை வைத்து வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகும் தேதியை தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டைன்மென்ட் வெளியிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டான துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி சில காரணங்களுக்காக அந்தப் படத்திலிருந்து அதிரடியாக விலகிவிட்டனர்.

Also Read

இதையும் படிங்க: கேப்டன் குடும்பம் போட்ட கண்டீசன்! உஷாரான விஜய்.. பதறி ஓடிய விஜய் ஆண்டனி

பொதுவாக நடிகர்கள் அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வருமா என காத்திருந்த காலமெல்லாம் மாறிப்போய் தற்போது மணிரத்னம் படம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் அளவுக்கு சில நடிகர்கள் மாறியுள்ளனர். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் நடித்த துல்கர் சல்மான் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக துல்கர் சல்மான் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார். சிம்பு அவருக்கு பதில் உள்ளே நுழைந்த நிலையில் ஜெயம் ரவியும் அந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். தற்போது சிம்பு மற்றும் அசோக் செல்வன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னவொரு முரட்டுத்தனம்!.. மேடையிலேயே அஞ்சலி மேல கையை வச்ச பாலய்யா!.. ஷாக்கிங் வீடியோ!..

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மீனாட்சி சௌத்ரி தான் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வருடத்திற்கு ஒரு படம் நடித்து வந்தால், 72 வயதை கடந்து அவரது அப்பா மம்மூட்டி வருடத்திற்கு மூன்று முதல் ஐந்து படங்களில் நடித்து மாஸ்க் காட்டி வருகிறார். துல்கர் சல்மான் கடைசியாக நடித்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் அவருக்கு லக் கொடுக்கிறதா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: புள்ளப்பூச்சியெல்லாம் சூர்யாவுக்கு வில்லனா? ஆண்டவன் மேல பாரத்த போடுவோம்.. வெளியான சூர்யா43 அப்டேட்