Connect with us
Goundamani

Cinema History

அப்படியா செஞ்சாரு கவுண்டமணி? அலும்பு தாங்கலப்பா.. ஆனா அப்புறம் நடந்தது தான் ஆச்சரியம்..!

நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி சமீபத்தில் 85வது பிறந்தநாளைக் கொண்டாடினார். டைமிங் காமெடியில் அவர் தான் கிங். அவரது திரையுலகப் பயணத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.

‘ராமன் எத்தனை ராமனடி’ படம் 1970ல் வெளியானது. அந்தப் படத்தில் ஒரு காட்சியில் டிரைவராக வருவார் கவுண்டமணி. அவர் ஒரு சாதாரண ஜூனியர் ஆர்டிஸ்டாக அப்போது நடித்து வந்தார். அந்தப் படத்தில் முதல் காட்சியில் அவர் நடிக்கும் போது சின்னதாக ஒரு நடுக்கம் தெரியும். ஆனால் அந்தப் படத்தில் அவர் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.

இதையும் படிங்க… பிரம்மாண்டத்தில் மயங்கி போன அஜித்! பழசுதானாலும் இவர விட்டா யாருமில்ல.. அட போங்கப்பா

1977ல் தான் கவுண்டமணிக்கு பிரகாசமான காலம் வந்தது. அது தான் 16 வயதினிலே படம். அதன்பிறகு தான் கவுண்டமணியை எல்லாருக்கும் தெரிந்தது. உதவி இயக்குனர்கள் சொன்னதற்கும் ஒரு படி மேல போய் தன்னோட டயலாக், டைமிங்கை வேற லெவலில் செய்து காட்டி அசத்தினார்.

ஒரு தடவை பொள்ளாச்சியில் சூட்டிங் நடந்ததாம். ஹீரோவுக்கு பூ போட்ட கலர் சட்டை. கவுண்டமணிக்கு வெள்ளை சட்டை. அதைக் கொண்டு உதவியாளர் கொடுத்ததும் பொங்கி எழுந்தாராம் கவுண்டமணி. ‘என்னடா நான் என்ன தாத்தா வேஷமா போடுறேன்.

ஹீரோவுக்கு ப்ரண்டுடா… போய் டி ஷர்டை எடுத்துட்டு வாடா’ன்னு அனுப்பினாராம். ‘டி-ஷர்ட் இல்லீங்க’ன்னு உதவியாளர் சொல்லவும் ‘அப்போ கடைக்குப் போய் வாங்கிட்டு வாடா’ன்னு அனுப்பினாராம். ‘அதுக்கு டவுனுக்குத் தான் போணும். 2மணி நேரமாகும்’னு சொன்னாராம். அதைக் கேட்காமல் ‘போய் வாங்கு’ என அசராமல் இருந்தாராம் கவுண்டமணி. அந்தப் படத்துக்கு ஹீரோ மட்டுமல்ல.

இதையும் படிங்க… பகத்பாசில் அதை எல்லாமா சொல்வார்? முன்னணி ஹீரோக்களுக்குப் போட்ட சூடா..?

மொத்த யூனிட்டுமே கவுண்டமணிக்காகக் காத்திருந்ததாம். இந்த சம்பவம் குறித்து படத்தின் உதவி இயக்குனர் இப்படி சொன்னாராம். முதலில் எங்களுக்கு கோபம் வந்தது. ஏன்னா டி ஷர்ட் வர தாமதமாகி விட்டது. ஆனால் டி ஷர்ட் போட்டதும் அவரது பாடி லாங்குவேஜ் எங்களையே அசத்திவிட்டது. காட்சியையே இளமை துடிப்போடு கலர்புல்லாக ஆக்கிவிட்டார் கவுண்டமணி என்றாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top