கறி சாப்பிட சொன்னது குத்தமாயா?. கணவனை அடித்தே கொன்ற மனைவி.. சிவகாசியில் அதிர்ச்சி

Published On: December 24, 2019
---Advertisement---

184ed9bb766e8b196185542d1e485ad2

சிவகாசியை அடுத்துள்ள மடத்துபட்டி பகுதியில் வசித்து வந்தவர் முத்துராஜ். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.  இவர் நேற்று பரோட்டா மற்றும் சிக்கன் ஃபிரை வாங்கிகொண்டு வீட்டிற்கு சென்றர்.  ஆனால், தனது உறவினர் ஒருவர் ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ளதால், கறி சாப்பிட மாட்டேன் என அவரின் மனைவி தனலட்சுமி கூறியுள்ளார்.

ஆனால், முத்துராஜ் கறியை சாப்பிடுமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். மகனையும் சாப்பிடக்கூறி முத்துராஜ் வற்புறுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து முத்துராஜ் தனலட்சுமி அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமியும் அவரின் சகோதரரும் முத்துராஜை கம்பால் அடித்து கொலை செய்துள்ளனர்.

எனவே, போலீசார் அவர்கள் இருவரும் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment