Cinema History
ரஜினிக்கு அப்படி ஒரு மகாசக்தியா? அவர் வைத்த டைட்டில்கள் எல்லாம் சூப்பர்ஹிட் ஆச்சே..!
தமிழ்த்திரை உலகின் உச்சநட்சத்திரம் என்று போற்றப்படுபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல ஆலோசனையும் சொல்லக்கூடியவர். கொடுக்கும் வசனங்களைத் தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லி அசத்துவதில் கில்லாடி. அதனால் தான் இவர் எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அது ஸ்டைலாகி விடுகிறது.
இவர் படங்களில் நடிக்கும்போது டைட்டில்களும் வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத தகவல். அது என்னென்ன படங்கள் என்று பார்ப்போம்.
இதையும் படிங்க… அஜித் சொன்ன வார்த்தைக்காக துணிந்து இறங்கிய விஜய்! ‘கோட்’ படத்தின் பின்னனியில் இப்படி ஒரு சம்பவமா?
ரஜினியே வைத்த டைட்டில் தான் படையப்பா. முதலில் இந்த டைட்டிலை ரஜினி சொன்னதும் அதென்னவோ பேரு புதுசாத் தான் இருக்கு. இது ரசிகர்கள் மத்தியில் எடுபடுமா என சந்தேகத்துடன் ரவிக்குமார் கேட்க, இது என் உள்ளுணர்வு சொன்ன டைட்டில். அதைத் தான் வைக்கணும். அது புதுசா இருக்குல்ல.
அதுதான் ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பா எடுபடும் என்று உறுதியாக சொன்னாராம் ரஜினி. படத்தின் டைட்டில் ஆறுபடையப்பன் என்ற முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்ததால் அவர் சம்பந்தமான காட்சிகளையும், வேலையும் படத்தில் சேர்த்தார்களாம்.
இந்தப் படத்திற்கு முன் அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களுக்கும் ரஜினி தன் உள்ளுணர்வு சொன்னதைக் கேட்டுத் தான் டைட்டில் வைத்தாராம். அப்படின்னா ரஜினிக்குள்ள ஏதோ ஒரு மகாசக்தி இருக்கும் போல.
இந்தப் படங்கள் எல்லாமே ஆக்ஷன் ஹிட்டுகள் தான். அண்ணாமலை படத்திற்கும், படையப்பா படத்திற்கும் ரஜினி தான் டைட்டில் வைத்தார் என்றால் அது நம்பத்தகுந்ததாக உள்ளது. ஏன்னா இந்த இரண்டு படங்களும் கடவுளின் பெயர்களைக் கொண்டவை. ரஜினியும் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் பாட்ஷா படத்திற்கு ரஜினி டைட்டில் வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது.
இருக்கலாம். ஏன்னா அவர் தன்னோட ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர். அதனால் அவர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பது நன்றாகத் தெரியும். வைக்கிற டைட்டில்லயே ரசிகர்களுக்கு ஸ்டைலையும் சேர்த்துக் கொண்டு வந்து விடுவார். அது தான் ரஜினி. உதாரணமாக மலைடா… அண்ணாமலைடான்னு சொல்வார்.
அதே போல நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரின்னு பாட்ஷாவில் சொல்வார். அதே போல படையப்பாவில் என் வழி தனி வழின்னு பஞ்ச் டயலாக் சொல்வார். இதுதான் ரஜினியை மற்ற நடிகர்களிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது.