Cinema History
சண்டை போட்டு 40 வருடங்களாக நடிகையிடம் பேசாமல் இருந்த ஜெயலலிதா!.. பின்னணி இதுதான்!..
நடிகை, அரசியல்வாதி, எம்.பி, எம்.எல்.ஏ, முதலமைச்சர், தமிழக அரசியலில் ஆளுமை மிக்க பெண்மணி என தனது வாழ்வில் பல முன்னேற்றங்களை பார்த்தவர் ஜெயலலிதா. ஆனால், இவை எதுவுமே அவர் திட்டமிட்டதில்லை என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் நடிப்பதிலேயே அவருக்கு ஆர்வம் கிடையாது.
குடும்ப சூழ்நிலை மற்றும் அம்மா வற்புறுத்தியதால் சினிமாவுக்கு வந்தவர். ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான வெண்ணிற ஆடை படம் மூலம் நடிக்க துவங்கினார். அவரின் அதிர்ஷ்டம் இரண்டாவது படமே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: அதிக சம்பளம் வாங்குவதில் போட்டி போடும் கோலிவுட் இயக்குனர்கள்!. நம்பர் ஒன் இவர்தானாம்!..
அதன்பின் எம்.ஜி.ஆரின் படங்களில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். எம்.ஜி.ஆருடன் நடித்தவரை அவர் வேறு எந்த ஹீரோவுடனும் ஜோடி போட்டு நடிக்கவில்லை. அதேநேரம், சில காரணங்களால் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஒதுக்கியபோது கோபத்தில் சிவாஜி, ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோருடன் நடிக்க துவங்கினார்.
ஒருகட்டத்தில் அதிமுகவில் இணைந்து எம்.ஜி.ஆர் சொன்னதை செய்து வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் கட்சியில் முக்கிய இடத்தை பிடித்து நாட்டின் முதலமைச்சராகவும் மாறினார். சினிமாவில் நடித்தபோது சக நடிகைகளுடன் ஜெயலலிதா நட்பு பாராட்டவில்லை. சச்சு, மனோரமா போன்ற காமெடி நடிகைகளிடம் பழகியது போல் கூட அவர் அப்போது கதாநாயகியாக நடித்த சரோஜினி தேவி, லதா, மஞ்சுளா ஆகியோருடன் அவர் நட்பாக பழகவில்லை. அதற்கு காரணம் அவர் ஒரு தனிமை விரும்பியாகவே இருந்தார்.
இதையும் படிங்க: நிவேதா பெத்துராஜ் கார் டிக்கியில என்ன இருந்துச்சு தெரியுமா?.. போலீஸ் உடன் வாக்குவாதம் செய்தது ஏன்?
ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது பல படங்களிலும் நடித்தவர் சௌகர் ஜானகி. ஜெயலலிதாவை விட சரளமாகவும், அழகாகவும் ஆங்கிலம் பேசும் திறமை உடையவர். அதனால், சில சமயம் அவருக்கு எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் கொடுப்பார். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. இதனால், அவர் சௌகர் ஜானகியுடன் நட்பாக பழகவே இல்லை.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சௌகார் ஜானகி ‘ சில காரணங்களால் 40 வருடங்கள் நானும் ஜெயலலிதாவும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒருமுறை ஜெயா டிவியில் பேட்டி கொடுத்தபோது ‘ஜெயலலிதா நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமராக வர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்’ என சொன்னேன். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. இதைப்பார்த்து ஜெயலலிதா எனக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினார். அதை லேமினேட் செய்து வீட்டில் வைத்திருக்கிறேன்’ என சௌகார் ஜானகி சொல்லி இருக்கிறார்.