Cinema History
திடீரென ஓடிவந்த மனோபாலா!.. கடுப்பாகி திட்டிய இளையராஜா!.. மோகன்தான் காரணமாம்!…
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் மனோபாலா. ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆகாய கங்கை. அதன்பின் கிட்டத்தட்ட 20 படங்களுக்கும் மேல் இயக்கினார். ரஜினி, ராதிகா நடித்து வெளியான ஊர்க்காவலன் படத்தை இயக்கியது மனோபாலாதான்.
ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். தனது ஒல்லியான தோற்றத்துக்கு ஏற்றார் போல காமெடி வேடங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 1000 படங்களில் நடித்தார் மனோபாலா. விவேக் மற்றும் வடிவேலுடன் இணைந்து பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஹரா படத்தில் மோகன் நடிச்சதுக்கு இதுதான் காரணமா? ‘கம்பேக்’கா… ‘கோபேக்’கா…ன்னு படம் வந்தா தானே தெரியும்..!
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா கடந்த வருடம் மரணமடைந்தார். இவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளங்களில் பலரும் இவரின் புகைப்படங்களை பகிர்ந்து இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், இளையராஜாவின் மனோபாலா திட்டு வாங்கிய சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
இயக்குனராவது என முடிவெடுத்த பின்னர் இளையராஜாவின் சம்மதத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என ஆசைப்பட்ட மனோபாலா ராஜாவை ஸ்டுடியோவில் சந்திக்க முடியாமல் கோடம்பாக்கம் பாலத்தில் காத்திருப்பாராம். அப்படி அவரை அங்கு பார்த்து காரை நிறுத்தி ராஜா விசாரித்துவிட்டுதான் ‘ஆகாய கங்கை’ படத்திற்கு இசையமைத்தார். அதன்பின் மனோபாலா இயக்கிய பல படங்களுக்கும் ராஜா இசையமைத்தார்.
இதையும் படிங்க: அடுத்த எம்.ஜி.ஆர் இவர்தான்!.. ஜெயலலிதா சொன்ன அந்த நடிகர்!.. நடந்தது இதுதான்!…
2வது படத்திலேயே நடிகர் மோகனை வைத்து படத்தை இயக்க ஆசைப்பட்ட மனோபாலா அவரை சந்திப்பதற்காக ‘ஓசை’ என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்த பிரசாத் ஸ்டுடியோவுக்கு போயிருக்கிறார். அப்போது ஒரு கூண்டில் மோகன், பேபி ஷாலினி ஆகியோரை அடைத்து அங்கு 100 பாம்புகளையும் போட்டு ஷூட்டிங் நடந்து வந்தது.
அதைப்பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். திடீரென சிலர் மோகனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அவரை ஒரு பாம்பு கடித்துவிட்டதாக சொல்லப்பட்டது. மனோபாலா பாம்புகளை கொண்டு வந்தவரிடம் ‘நாங்கள் எல்லாம் மோகனை நம்பித்தான் இருக்கிறோம். கவனமாக இருக்க கூடாதா?’ என கேட்க, ‘நான் எல்லா பாம்புகளின் வாயையும் தைத்துவிட்டேன். ஒரு பாம்புக்கு மட்டும் நூல் கிடைக்காமல் லப்பர் பேண்ட் போட்டுவிட்டேன். அதனால் இப்படி ஆகிவிட்டது.
நீங்கள் மத்த பாம்புகளின் வாயை பாருங்கள்’ என சில பாம்புகளை தூக்கி மனோபாலவிடம் அவர் காட்ட பயந்து போன மனோபாலா அங்கிருந்து ஓடி அருகிலிருந்த இளையராஜாவின் ஸ்டுடியோவுக்குள் போய்விட்டாராம். திடீரென அவர் உள்ளே ஓடி வந்ததை பார்த்து கோபப்பட்ட இளையராஜா மனோபாலவை செமையாக திட்டி இருக்கிறார். இந்த தகவலை மனோபாலாவே சில வருடங்களுக்கு முன் யுடியூப் சேனலில் பேசி இருந்தார்.