Connect with us
farina

Cinema News

தன் காதலனா இருக்க ஃபரீனா போட்ட கண்டீசன்! உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அத செஞ்சிட்டாரு..

Serial Actress Farina: சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்திற்கு என பேர் போனவர் நடிகை ஃபரினா ஆசாத். அதுவும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி கேரக்டராக நடித்து இன்றளவு மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்தார் பாரதி கண்ணம்மா. அந்த தொடர் எப்பேர்பட்ட வெற்றியைப் பெற்றது என அனைவருக்கும் தெரியும். அந்த ஒரு தாக்கத்தினால் தான் ஃபரீனாவை எங்கு பார்த்தாலும் மிக எளிதாக ரசிகர்கள் அடையாளம் கண்டு விடுகின்றனர்.

ஆரம்ப காலங்களில் ஒரு தொகுப்பாளராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு விஜய் டிவி சன் டிவி ஜீ தமிழ் ராஜ் டிவி போன்ற பல சேனல்களில் பணியாற்றி இருக்கிறார். கிச்சன் கலாட்டா, கோலிவுட் அன் கட்,  ஷோ ரீல் ,அஞ்சரை பெட்டி போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியலில் தான் நடிகையாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: ஓ இப்படிப்பட்டவரா கார்த்திக்? இது தெரியாம வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்காங்களே?

அதன் பிறகு பாரதிகண்ணம்மா தொடர் அவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது ஃபரீனா விஜய் டிவியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள டிக் டிக் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் தோன்றினார். அதன் பிறகு ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் கெஸ்ட் ஆக வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் .

இந்த நிலையில் அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. அவருடைய காதல் அனுபவம் குறித்த ஒரு செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்கு முன்பு ஃபரீனா காதல் டார்ச்சரில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு பையன் ஃபரீனாவை காதலிப்பதாக மிகவும் டார்ச்சர் செய்து கொண்டிருந்தாராம். அப்போது ஃபரீனா எங்க வீட்டில் முஸ்லிம் பையனா இல்லைனா ஒத்துக்கவே மாட்டாங்க என பொய் சொன்னாராம்.

இதையும் படிங்க: நாட்டாமை உருள தண்டம் போட்டதெல்லாம் வீணாப்போச்சே!.. தோல்வி முகத்தில் ராதிகா சரத்குமார்…

ஆனால் அது உண்மை என நம்பி அந்தப் பையன் முஸ்லிமா இருக்கிறதுக்கு என்ன பண்ணனுமோ அதை ஆஸ்பத்திரியில் போய் செய்து கொண்டு வந்து நின்னாராம். இந்த ஒரு செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் காதலில் எப்பொழுதும் விளையாடுவது பெண்கள் தான் போல ,உண்மை காதலா இருக்கும் போல என பல கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.

Continue Reading

More in Cinema News

To Top