நயன்தாரா இல்லனா திரிஷா!.. அடுத்த படத்துக்கு அடிபோடும் ஆர்.ஜே.பாலாஜி!.. அந்த படத்தின் 2ம் பாகமாம்!..

Published on: June 4, 2024
rj balaji
---Advertisement---

ரேடியோவில் தொகுப்பாளராக வேலை செய்தவர் ஆர்.ஜே. பாலாஜி. லொட லொட என பேசும் அவரை சுந்தர் சி தான் இயக்கிய ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் நடிக்க வைத்தார். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்திலும் நடித்தார். நடிப்பு நமக்கு செட் ஆகாது என நினைத்தவருக்கு நடிப்பே கேரியராக மாறிவிட்டது.

இத்தனைக்கும் சுந்தர் சி படத்தில் அவர் நடித்திருப்பதை மானிட்டரில் பார்த்துவிட்டு ‘சார் என்னை விட்ருங்க சார் எனக்கு இது வராது’ என சொன்னவர்தான் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், சுந்தர் சி வற்புறுத்தியதால் தொடர்ந்து அந்த படத்தில் நடித்தார். அதன்பின் நானும் ரவுடிதான், ஜில் ஜங் ஜக், புகழ், தேவி, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தார்.

இதையும் படிங்க: மனுஷன் இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்காரே!.. கோட் படத்துல அதையும் முடிச்சிட்டாராம்!.. என்னதான் பிளான்!..

ஒருகட்டத்தில் நாமே ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது என முடிவெடுத்தார். அப்படி உருவான திரைப்படம்தான் எல்.கே.ஜி. முதல் படமே அவருக்கு வெற்றியாக அமைந்தது. நடப்பு அரசியலை அழகாக அப்படத்தில் படம்பிடித்து காட்டி இருந்தார். அந்த படத்தின் அவருக்கு நம்பிக்கையை கொடுக்கவே மூக்குத்தி அம்மன் படத்தை அவரே இயக்கினார்.

மக்களிடம் இருக்கும் பக்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி போலீச்சாமியார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இப்படத்தில் காட்டி இருந்தார். இப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், அதன்பின் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் ஓடவில்லை.

இதையும் படிங்க: கில்லிக்கே சல்லியாயிட்டாங்க! இதுல அந்தப் படமா? விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸாகப் போகும் படம்

எனவே, மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஆர்.ஜே.பாலாஜி இப்போது ஈடுபட்டிருக்கிறார். ஆனால், நயன்தாராவுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. சமீபகாலமாக நயனின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஓடுவதில்லை. அதோடு, அவரின் 10 கோடிக்கும் மேல் சம்பளம் கேட்கிறார்.

எனவேதான், இப்போது மார்கெட் இருக்கும் திரிஷா பக்கம் ஆர்.ஜே.சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. எல்லாம் செட் ஆனால் இந்த படத்தை அவர் துவங்குவார். இல்லை வேறு ஒரு தயாரிப்பாளர் பணப்பொட்டியோடு வந்தால் இதை விட்டுவிட்டு அந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.