Connect with us
rajini

Cinema News

எந்தப் பக்கம் போட்டாலும் கோல் அடிப்பாங்களே! ‘முத்து’ படத்தில் நடிக்க இருந்த நடிகை.. வேண்டாம் என மறுத்த ரஜினி

Muthu Movie:தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை மக்கள் மனதில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடப்படும் நடிகராக இருக்கிறார் .அவருடைய ஸ்டைலுக்கும் சுறுசுறுப்பான நடிப்புக்கும் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் அடிமை என்று சொல்லலாம்.

அதனாலேயே இன்று வரை தன்னுடைய இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் அதே உத்வேகத்துடன் இருந்து வருகிறார் ரஜினி. தற்போது வேட்டையன் படத்தை முடித்துவிட்டு விடுமுறை பயணமாக இமயமலை சென்று இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் இணைய இருக்கிறார் .

இதையும் படிங்க: மௌனராகத்தை விட இதயக்கோவில் தான் மோகனுக்குப் பிடிக்குமாம்… அட இதுதான் காரணமா?

அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியைப் பற்றி பிரபல இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .அதாவது ரஜினியிடம் ஒழிவு மறைவு என்பது அறவே கிடையாது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பற்றி கூறினார். ரஜினி கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான ஒரு மெகா ஹிட் திரைப்படம் தான் முத்து. அந்தப் படம் ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய வசூலை பெற்றுத்தந்த படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். ரஜினியின் எஜமானாக சரத்பாபு நடிக்க அவருக்கு ஜோடியாக சுபஸ்ரீ என்ற ஒரு நடிகை நடித்திருப்பார். இந்த நடிகைக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது ஊர்வசியாம். அந்த நேரத்தில் ஊர்வசி பல படங்களில் அவருடைய பலவகையான திறமைகளை காட்டி ஒரு முன்னணி நடிகையாக இருந்ததனால் அவரை இந்தப் படத்தில் போட்டால் நன்றாக இருக்கும் என ஊர்வசி இடமும் பேசி இருக்கிறார்கள்.’

இதையும் படிங்க: ரஜினியை பகைச்சிக்கிட்டா அவ்ளோதான்!.. ரோஜாவை போட்டு பொளக்கும் தலைவர் ஃபேன்ஸ்.. அதான் மேட்டரா?..

ஊர்வசியும் சம்மதித்து விட்டாராம். இதை ரஜினியிடம் தெரிவிக்க ரஜினி  ‘இந்த ஒரு சின்ன கேரக்டரில் ஊர்வசியை நடிக்க வைப்பதா? அவர் சமீப காலமாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ஒரு பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை போய் இந்த கேரக்டரில் நடிக்க வைக்கலாமா?’ என்று சொல்லியதோடு இதை நீங்கள் யாரும் சொல்ல வேண்டாம்.

urvasi

urvasi

நானே ஊர்வசியிடம் போய் சொல்கிறேன். அதுதான் சரியாக இருக்கும் என ஊர்வசியிடம் ரஜினியே நேராக போய் ஊர்வசியின் திறமையும் இந்த கேரக்டரில் உள்ள தன்மையையும் எடுத்துக் கூறி அவரை இந்த படத்தில் வேண்டாம் என கூறியிருக்கிறார். ஒரு பெரிய நடிகராக இருந்தும் அவரே போய் சொல்ல வேண்டியது என்பது அவசியம் இல்லை. ஆனால் இதை நான் சொன்னால் தான் சரியாக இருக்கும் என்று ரஜினி உணர்ந்து ஊர்வசி இடம் சொன்னது எங்கள் அனைவருக்கும் மிக ஆச்சரியமாக இருந்தது என ரமேஷ் கண்ணா அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: கமல் வந்தாலே அந்த இடத்துல இருக்க மாட்டீங்களே ஏன்?.. மோகனை நல்லா மாட்டிவிட்ட சுஹாசினி!..

Continue Reading

More in Cinema News

To Top