Connect with us
preeth

latest news

அட்ஜெஸ்ட்மெண்டா வேணும்! இந்தாப் பிடி.. சரியான பதிலடி கொடுத்த ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை

Siragadikka Aasai: வெள்ளி திரை விட சின்னத்திரைதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதுவும் குடும்ப பெண்களை எப்பொழுதுமே கவரும் வகையில் புதுப்புது சம்பவங்களை சீரியல்களிலும் புகுத்தி அந்த வகையில் ஒரு கியூரியாசிட்டியை ஏற்படுத்தி நாள்தோறும் சின்னத்திரை தொடர்களை பார்க்க வைப்பதில் பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. டிஆர்பியிலும் டாப் ரேங்கில் உள்ள தொடராக இந்த சிறகடிக்க ஆசை தொடர் இருந்து வருகிறது. இதில் ஹீரோ ஹீரோயினை விட பெருமளவு பேசப்படும் கதாபாத்திரமாக இருப்பவர் ஸ்ருதி என்ற கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தி.

இதையும் படிங்க: சரத்குமார் ஹீரோதான்!. ஆனா நாட்டாமை படத்தில் கவுண்டமணி சம்பளம் என்ன தெரியுமா?!..

இவர் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறார் அவருக்கு என ஒரு தனி ஃபேன் பாலோயர்ஸ்கள் இருக்கின்றனர். அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சீரியலுக்குள் நான் வருவதற்கு என்னென்ன கஷ்டங்களை சந்தித்தேன் என்பதை பற்றி கூறியிருக்கிறார். எப்பவும் போல ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் சினிமாவிற்கு நடிக்க வேண்டும் என விருப்பப்படும்போது ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள் மாதிரியே ப்ரீத்தி வீட்டிலேயும் அந்த மாதிரி ஒரு எதிர்ப்புதான் இருந்திருக்கின்றன.

இருந்தாலும் சரி தன் மகள் ஏதோ செய்கிறாள் என விட்டு விட்டார்களாம். யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் பல ஆடிசன்களை கடந்து கடைசியில் இந்த வாய்ப்பு வந்ததாக ப்ரீத்தி அந்த பேட்டியில் கூறினார் .அதைப்போல சினிமாவில் நடிக்க வரும் புதுமுக நடிகைகள் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக இருப்பது அட்ஜஸ்ட்மென்ட். ஆரம்பத்தில் எனக்கும் ஒருத்தர் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டார். நான் முடியாது என சொல்லிவிட்டேன்.

இதையும் படிங்க: இப்ராஹிம் ராவுத்தரை பயமுறுத்தி உருவான விஜயகாந்த் படம்!.. ஆர்.கே.செல்வமணி வந்ததே அப்படித்தான்!..

ஆனால் அதற்கு அந்த நபர் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் இந்த சினிமாவில் நீ என்னத்த கிழிக்க போற என படுமோசமாக பேசினாராம். இதைப் பற்றி பேசும்போது பிரீத்தியை பேட்டி எடுத்த தொகுப்பாளினி ஒருவர் அப்படி கேட்ட அந்த நபருக்கு நீங்கள் இப்பொழுது என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார். இதற்கு பதில் அளித்த பிரீத்தி எப்படி வந்து உட்கார்ந்து இருக்கிறேன் பாருங்கள். இது தான் அவருக்கு நான் கொடுக்கும் பதிலடி .

அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் எப்படி சினிமாவில் வர முடியும் என அன்று என்னைக் கேட்டார். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம். எனினும் அந்த நபர் சோசியல் மீடியாக்களில் என்னை பாலோ செய்து கொண்டு தான் வருகிறார். இப்போது தெரிந்திருக்கும் என்னை பற்றி. இதுதான் நான் அவருக்கு கொடுக்கும் பதிலடி. இருந்தாலும் அந்த நபரை நான் பிளாக் செய்து விட்டேன் என கூறினார் ஸ்ருதி ஆகிய பிரீத்தி.

இதையும் படிங்க: எந்தப் பக்கம் போட்டாலும் கோல் அடிப்பாங்களே! ‘முத்து’ படத்தில் நடிக்க இருந்த நடிகை.. வேண்டாம் என மறுத்த ரஜினி

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in latest news

To Top