Cinema News
கேப்டன் மில்லர் படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்!.. இந்த தங்கத்தை தகரம்னு விட்டுட்டீங்களேடா!..
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கியது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடவில்லை.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர்மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களும் அதிக பொருட்செலவில் உருவான நிலையில், அதிகபட்சமாக 75 கோடி வசூலை தாண்டவில்லை என கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஜென்டில் மேன் டூ இந்தியன் 2… சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்திய ஷங்கர்…!
மேலும், இரண்டு படங்களும் வசூல் ரீதியாக லாபம் பெறாமல் நஷ்டம் அடைந்தன. அங்கு ஆரம்பித்த தலைவலி கடந்த 6 மாதங்களாக பல தமிழ் படங்கள் வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் மட்டுமே 100 கோடி வசூலை தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த போர் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அதை அப்படியே இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக நடந்த கதையாக மாற்றி கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். தனுஷ் அந்த படத்துக்கு கடுமையான உழைப்பை கொட்டியிருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க: இவங்களாம் இப்போ எங்க போனாங்க? 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்து காணாமல் போன பிரபலங்கள்
தமிழ் சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாட தவறி விட்டதாகவே தனுஷ் ரசிகர்கள் கூறிவந்த நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள 10வது சர்வதேச திரைப்பட விழாவில் கேப்டன் மில்லர் திரைப்படம் போட்டிக்கு தேர்வாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு எந்த தமிழ் படத்திற்கும் அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படம் அடுத்த மாதத்துக்கு தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் இன்னமும் தனுஷ் அறிவிக்கவில்லை. மேலும், ராயன் படத்தை புரமோட் செய்யவும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. அடுத்த மாதமும் பல படங்கள் போட்டியாக வெளியாக உள்ள நிலையில், சோலோ ரிலீஸ் தேதியை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தரக்குறைவாக பேசிய வடிவேலுவுக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்த அஜித்! இது யாருக்காவது தெரியுமா?