Cinema History
சிவாஜியிடம் கடைசியாக ஏதோ சொல்ல ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!.. புதைந்து போன ரகசியம்!…
எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருமே சிறு வயதிலேயே நாடகங்களில் நுழைந்து பின்னாளில் சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆர் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறினார். ஆனால், சிவாஜியோ பராசக்தி என்கிற முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தார்.
எம்.ஜி.ஆர் ஆக்சன் ரூட்டை கையில் எடுத்தால் சிவாஜியோ செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த அழுத்தமான குடும்ப கதைகளில் நடித்தார். எம்.ஜி.ஆருக்கு சண்டை காட்சிகள் என்றால் சிவாஜிக்கு நடிப்பு என மாறியது. சிவாஜிக்கு தனி ரசிகர்களும், எம்.ஜி.ஆருக்கு தனி ரசிகரக்ளும் உருவானார்கள்.
இதையும் படிங்க: சிவாஜி குடும்பத்துக்கு தோல்வி!.. அஜித் கொஞ்சம் கூட நன்றி இல்லாதவன்!.. கொந்தளிக்கும் பிரபலம்..
சிவாஜியின் நடிப்பை எம்.ஜி.ஆர் எப்போதும் புகழ்ந்து பேசுவார். அதேபோல், எம்.ஜி.ஆரை மிகவும் மரியாதை அண்ணன் என்றே அழைப்பார் சிவாஜி. சினிமாவில் போட்டி இருந்தாலும் நிஜ வாழ்வில் அவர்களுக்குள் எந்த மோதலும் இருந்தது இல்லை. ஆனால், அரசியலால் அந்த மோதல் வந்தது.
இருவரும் வெவ்வேறு கட்சிகளை ஆதரித்ததால் பொது மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டார்கள். ஆனால், அது தேவையில்லாத ஒன்று என எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் சிவாஜியே உணர்ந்தார். இதை அவரே ஒரு மேடையில் பேசி இருக்கிறார். எங்கள் இருவரையும் அரசியல் பிரித்துவிட்டது என பேசினார் அவர்.
எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது அங்கு போய் அவரின் உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டு வந்தார் சிவாஜி. சிவாஜி அங்கே சென்றிருந்த போது ‘உன்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்க விரும்புகிறேன்’. நான் வீட்டுக்கு வந்தபின் என்னை வந்து பார்’ என சொன்னார் எம்.ஜி.ஆர்.
ஆனால், அது நடப்பதற்குள் எம்.ஜி.ஆர் மறைந்துவிட்டார். எனவே, சிவாஜியிடம் எம்.ஜி.ஆர் எந்த பொறுப்பை ஒப்படைக்க விரும்பினார் என்பது மண்ணுக்குள் புதைந்த ரகசியமாகவே போய்விட்டது.