Cinema History
நான் பாடினது பிடிக்காம டி.எம்.சவுந்தர்ராஜனை பாட வச்சாங்க!.. எஸ்.பி.பி சொன்ன ரகசியம்…
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு ஆஸ்தான பாடகராக இருந்தவர் டி.எம்.சவுந்தர ராஜன். அவர்களின் படங்களில் அனைத்து பாடல்களையும் டி.எம்.எஸ் பாடுவார். அதற்கு காரணம் அவரின் குரல் அவர்கள் 2 பேருக்கும் அப்படியே பொருந்தும். இதில், எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என அவர்களின் இமேஜுக்கும், உருவத்திற்கும் ஏற்றார் போல குரலை மாற்றி பாடுவார் டி.எம்.எஸ்.
இருவருக்கும் பல காதல், சோக மற்றும் தத்துவ பாடல்களை டி.எம்.எஸ் பாடி இருக்கிறார். ஆனால், எல்லா துறையிலுமே புதியவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள். அப்படி, அவர் பீக்கில் இருக்கும்போது எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் போன்ற புதிய பாடகர்கள் வந்தார்கள். அவர்களும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் பாட துவங்கினார்கள்.
இதையும் படிங்க: சிவாஜியிடம் கடைசியாக ஏதோ சொல்ல ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!.. புதைந்து போன ரகசியம்!…
தமிழ் சினிமாவில் பாடத்துவங்கியபோது எஸ்.பி.பி மிகவும் சின்ன பையனாக இருந்தார். ஆனாலும், அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடலை பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதேபோல், சாந்தி நிலையம் படத்தில் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடலை ஜெமினிக்காக பாடினார்.
‘பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ’ பாடலை சிவாஜிக்காக பாடினார். இது எல்லாமே ஹிட் பாடல்கள். எம்.எஸ்.வியின் இசையில் பல பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. இளையராஜா வந்தபின் சொல்லவே தேவையில்லை. இருவரின் கூட்டணியிலும் பல ஆயிரம் இனிமையான பாடல்களை பாடினார் எஸ்.பி.பி.
இந்நிலையில், எஸ்.பி.பி ஒருமுறை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘அடிமைப்பெண் படத்தில் நான் ஒரு அம்மா பாடலை பாடினேன். ஆனால், அது மிகவும் மென்மையாகவும், மெதுவாகவும் இருப்பதாக சொல்லி அப்பாட்டை தூக்கிவிட்டனர். அதேபோல், அப்படத்தில் இடம் பெற்ற ‘தாய் இல்லாமல் நானில்லை’ பாடலையும் நான்தான் முதலில் பாடினேன். குரலில் வீரியம் இல்லை என சொல்லிவிட்டார்கள். அதன்பின் டி.எம்.எஸ் அந்த பாடலை பாடினார். உண்மையில் டி.எம்.எஸ் போல் என்னால் அப்போது பாட முடியவில்லை. இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை’ என அவர் சொன்னார்.
அதேநேரம், 2 பாடல்களை எஸ்.பி.பி பாடி அது நிராகரிக்கப்பட்டதால் எஸ்.பி.பி-க்காக ஒரு மாதம் காத்திருந்து ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை அவருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்தார். அதேபோல், பிரபல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை வரவழைத்து எஸ்.பி.பி பற்றி சொல்லி அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.