பிரேம்ஜி காதலில் நடந்த பிரச்சினை! ரகசிய திருமணத்திற்கு இதுதான் காரணமா? பிரபலம் சொன்ன தகவல்

Published on: June 8, 2024
remji
---Advertisement---

Premji: இப்போது தமிழ் சினிமாவில் நடிகரும் பாடகருமான பிரேம்ஜியின் திருமணம் பற்றித்தான் பேசு பொருளாக உள்ளது. எப்பொழுது தான் அவருக்கு திருமணம் நடக்கும்? ஒரு வேளை நடக்குமா நடக்காதா அல்லது இப்படியே இருந்து விடுவாரா என்றெல்லாம் பல கேள்விகள் இருந்தன. அந்த அளவுக்கு பிரேம்ஜிக்கு என சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்தனர் .சொல்லப்போனால் அவருடைய திருமணம் என்பது பல பெரிய பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீஸை  எப்படி ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அதைப்போல ஒரு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிரேம்ஜியின் திருமணம் நாளை திருத்தணியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த திருமணத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தலாம் என அவரது குடும்பத்தினர் நினைத்திருக்க திடீரென அவருடைய திருமண பத்திரிக்கை ஒன்று இணையதளத்திலும் வைரலானது. இதைப்பற்றி வந்த வெங்கட் பிரபு அவருடைய ட்விட்டர் பக்கத்தில்  ‘குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இந்த திருமணத்தை நடத்தலாம் என முடிவெடுத்திருந்தோம். ஆனால் எனது நண்பர் ஒருவர் திடீரென இந்த திருமண பத்திரிகையை வெளியிட்டு விட்டார்.

இதையும் படிங்க: மோகனை கெட்ட வார்த்தைகளில் கண்டபடி திட்டிய பாலசந்தர்… அட அந்தப் படத்துக்கா…. அப்படின்னா தேவை தான்..!

இருந்தாலும் இந்த திருமணத்தை அமைதியாக நடத்திட ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து தம்பதியினரை வாழ்த்தினால் போதும்’ என்றவாறு அந்த பதிவில் .பதிவிட்டு இருந்தார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது இந்த அளவுக்கு ரகசியமாக நடத்த என்ன காரணம் என்பதை பற்றியும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதாவது பிரேம்ஜியின் திருமணத்திற்கு அவருடைய குடும்பம் மற்றும் இளையராஜா குடும்பம் என கலந்து கொள்வார்கள். அது மட்டுமல்லாமல் இளையராஜாக்கு நெருக்கமாக இருக்கும் பாரதிராஜா பஞ்சு அருணாச்சலத்தின் குடும்ப உறுப்பினர்கள் என பல பெரிய பெரிய பிரபலங்கள் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள். இப்படி இருக்கும் போது இந்த திருமணத்தை அறிந்து மக்கள் கூட்டம் அங்கு அதிகமானால் தேவையில்லாத இடைஞ்சல்கள் வந்து சேரும் என்ற காரணத்தினாலே இந்த அழைப்பிதழை வெளியிடாமல் இருந்தனர்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி டீமுக்கு குட்பை!.. மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடும் அஜித்!.. என்னமோ நடக்குது!..

ஆனால் அதை இப்போது வெளியாகிவிட்டது. அதனால் வெங்கட் பிரபு இதற்கான முன்னேற்பாடுகள் எப்படி செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. அது மட்டும் அல்லாமல் பிரேம்ஜி திருமணம் செய்யப் போகும் அந்தப் பெண்ணை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. திருமணத்திற்கு பிறகு புகைப்படத்தை வெளியிடுவோம் என வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் பிரேம்ஜி ஒரு பெண்ணை காதலித்தாராம். அந்த காதல் தோல்வியில் முடிந்ததனால் தான் திருமணமே வேண்டாம் என இது நாள் வரை பிரேம்ஜி இருந்திருக்கிறார். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் திருமணமே வேண்டாம் என்றுதான்  நாள்களை கடத்தி இருக்கிறார் பிரேம்ஜி. ஆனால் இப்போது திருமணம் செய்ய போகும் அந்தப் பெண்ணும் காதலித்துக் கொண்டிருந்த பெண் தான் என அந்தணன் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: முதல் நாளிலேயே அடிவாங்கிய மோகன் படம்!.. ’ஹரா’ வசூல் இவ்வளவுதானா?.. அப்போ ’கோட்’ நிலைமை?

ஆனால் அந்தப் பெண் மீடியாவை சேர்ந்தவரோ பாடகியோ வேற எந்த பிரபலமோ கிடையாதாம். ஒரு சாதாரண பெண் தான் என்றும் அவரை எங்கேயோ வெளியில் பார்த்த பிரேம்ஜிக்கு பார்த்தவுடன் பிடித்து விட்டதனால் இவரை திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணி இன்று திருமணம் வரை இந்த காதல் கைகூடி இருக்கிறது என அந்தணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.