முதல் நாளிலேயே அடிவாங்கிய மோகன் படம்!.. ’ஹரா’ வசூல் இவ்வளவுதானா?.. அப்போ ’கோட்’ நிலைமை?
இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மைக் மோகன் நடித்த ஹரா திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நடிகை குஷ்பூ நடிக்காத நிலையில் அவருக்கு பதிலாக அனுமோல் மோகனின் மனைவியாக நடித்திருந்தார்.
கல்லூரியில் படித்த கடந்த மகள் திடீரென தற்கொலை செய்துகொண்டு மரணிக்க மகளின் மரணத்திற்கு காரணமான மருத்துவ மாஃபியா கும்பலை வேட்டையாடும் தந்தையாக மோகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மைக்கை பிடித்து பாடிவந்த மோகனிடம் கையில் துப்பாக்கியை கொடுத்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஓட விட்டுள்ளார். ஆனால் படம் தான் ஓடாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிட்டது.
இதையும் படிங்க: என்னை அந்த மாதிரி பேசறாங்கன்னு வருந்திய சிவாஜி… காமெடி படம் தயார் செய்து அசத்திய இயக்குனர்…!
14 வருடங்கள் கழித்து மீண்டும் மோகன் நடித்துள்ள படம் வெளியாக உள்ள நிலையில் அதைப் பார்த்து சென்று ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றமே மிஞ்சியது. கதை மற்றும் திரைக்கதை என இயக்குனர் சைடு வேலைகள் சுத்தமாக சரியாக இல்லை என்றும் படத்தின் மோகனை தவிர மற்ற எந்த நடிகரும் நடிப்பை வெளிப்படுத்தாமல் வாங்கிய காசுக்கு வந்து போனதாக விமர்சகர்கள் அந்தப் படத்தை வச்சு செய்து வருகின்றனர்.
முதல் நாளில் மோகன் நடித்த ஹரா திரைப்படம் 40 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெள்ளிவிழா நாயகனுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த நிலைமை சினிமாவில் வந்துவிட்ட நிலையில் மீண்டும் அவரை நடிக்க வைத்து கஷ்டப்படுத்தி உள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கார்த்திக்-கு அந்தப் படம் சுத்தமா பிடிக்கல! ஆனா பேயோட்டம் ஓடுச்சே.. என்ன காரணம் தெரியுமா?
மோகன் நடித்த ஹரா திரைப்படம் பெரிதாக வசூல் பெறாத நிலையில், இதன் பாதிப்பு நடிகர் விஜயுடன் இணைந்து மோகன் நடித்து வரும் கோட் படத்திலும் எதிரொலிக்குமா? என்கிற கேள்வியும் தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதிகமான ரசிகர்கள் இந்த படத்தை பார்க்காத நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்துக்கு பெரிதாக எந்த ஒரு பாதிப்பும் வராது என்றும் வெங்கட் பிரபு மாநாடு போல படத்தை இயக்காமல் கஸ்டடி போல படத்தை இயக்கினால் அதன் பின்னர் படத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்றே கூறுகின்றனர்.
கோட் படத்தை எப்படியாவது மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஏகப்பட்ட நட்சத்திரங்களை உள்ளே வைத்துள்ளனர் என்றும் மேலும் ஏஐ மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தும் வரப் போகிறார் என்பதால் அந்த படம் தப்பித்து விடும் என்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரே மந்தையில் இரு ஆடுகள்! முந்திக்கொண்ட பிரசாந்த்.. லெட்டர் பேடிலேயே உயிர் வாழும் விஜய்