Cinema News
ஒரு பாட்டு கூட தேறலயே!… அனிருத் மீது காண்டான ஷங்கர்!.. இந்தியன் 2 என்னாகுமோ?!…
ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேனுக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்தான். இப்படத்திற்கு ரஹ்மான் கொடுத்த துள்ளலான இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இளைஞர் கூட்டம் ரசிகராக மாறியதே இந்த படத்திலிருந்துதான். குறிப்பாக சிக்குபுக்கு ரயிலே பாடல் இளசுகளை ஆட்டம் போட வைத்தது.
அதன்பின் ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் ரஹ்மான் கொடுத்த பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த படத்தில் இடம் பெற்ற ஊர்வசி ஊர்வசி இளசுகளை ஆட வைத்ததால், என்னவளே அடி என்னவளே பாடல் மெலடி விரும்பிகளுக்கு விருந்தாக அமைந்தது. தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜின்ஸ், இந்தியன்,பாய்ஸ், ஐ, எந்திரன், 2.0 ஆகிய எல்லா படங்களுக்கும் ரஹ்மான்தான் இசை.
இதையும் படிங்க: வெளியானது பிரேம்ஜி திருமண போட்டோ!.. ஜோடி பொருத்தம் செம சூப்பர்!.. வைரல் பிக்!…
இந்நிலையில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியானபோதே பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், ஷங்கரின் மேக்கிங் உயரத்திற்கு அனிருத்தால் இசையமைக்க முடியுமா என்கிற சந்தேகம் பலருக்கும் வந்தது. ஏனெனில், இந்தியன் முதல் பாகத்திற்கு ரஹ்மான் கொடுத்த இசை அவ்வளவு சிறப்பாக இருந்தது.
ரஹ்மானின் இசை அப்படத்தின் வெற்றிக்கே முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அந்த அளவுக்கு அனிருத் இசையமைப்பாரா என்கிற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டது. இதுவரை 2 பாடல்கள் வெளியாகி இருக்கிறது. எதிர்பார்த்தபடியே இந்த பாடல்கள் ரசிகர்களை கவரவில்லை.
ஷங்கருடன் வேலை பார்ப்பது மிகவும் கஷ்டம் என ரஹ்மானே சொல்லுவார். அப்படி இருக்கும் ஷங்கர் எப்படி இப்படி மொக்கையான பாடல்களை அனிருத்திடம் வாங்கினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு அவரின் இசை பிடிக்கிறது என ஷங்கர் நம்பினாலும், வெளியான இந்தியன் 2 பாடல்கள் இளைஞர்களுக்கே பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் கேம் சேஞ்சர் என 2 படங்களை இயக்கியதால் ஷங்கரால் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போனதா என்பதும் தெரியவில்லை. இந்தியன் 2 படம் வெளிவந்த பின்னர்தான் பாடல்கள் வெற்றி பெறுகிறதா என்பது தெரியவரும்.