Indian 2: தமிழ் சினிமாவில் இந்த வருட இறுதியில் இருந்து பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் முதலாவதாக கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஜூலை 12ஆம் தேதி இந்த படம் உலகெங்கிலும் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்தது.
படத்திற்கு இசை அனிருத். படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த் காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடிக்கின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகம் பெருமளவு வெற்றி பெற்றதை அடுத்து இந்தியன் 2 படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தில் அமைந்த பாடல்கள் இந்தியன் படத்தில் ஏ ஆர் ரகுமான் போட்ட பாடலுக்கு ஈடு கொடுக்கவில்லை என்பதுதான் இப்போது இருக்கும் ஒரு கருத்து.
இதையும் படிங்க: இயக்குனர் மறுத்தும் விடாமல் கவர்ச்சி விருந்தைக் காட்டிய நயன்தாரா… என்ன ஒரு எளிமை…!
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் இந்தியன் படத்தின் போது நடந்த சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் நடிக்க அவருக்கு மேக்கப் போடுவதற்கு கமலின் அண்ணன் சந்திரஹாசன் புகைப்படத்தை வைத்து தான் போட்டார்களாம். அதே மாதிரி ஒரு முகம் வேண்டும் என்பதற்காக அவருடைய போட்டோவை அமெரிக்காவிற்கு அனுப்பி அப்புள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமலுக்கு மேக்கப் போட்டிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட அந்த மேக்கப்புக்கு 5 மணி நேரம் ஆகுமாம். ஆனால் சுகன்யாவுக்கு இந்தியாவில் இருக்கும் மேக்கப் ஆர்டிஸ்ட் வைத்து தான் மேக்கப் போட்டு இருக்கிறார்கள். ஏனெனில் சுகன்யாவின் முகம் அந்த அளவுக்கு பர்ஃபெக்ஷன் இல்லை என ஏ எம் ரத்தினம் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விஜயை அரசியலில் தள்ளிய அந்த 2 சம்பவங்கள்… இப்போது காய் நகர்த்துவது சரிதானா..?
ஆனால் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு அந்த மாதிரி இல்லாமல் அமெரிக்காவில் தான் மோல்டிங் எல்லாம் செய்து அதற்குரிய வேலைகளை இங்கிருந்தே ஏ எம் ரத்தினம் சொல்ல சொல்ல செய்திருக்கிறார்களாம். அதனால் காஜல் அகர்வாலுக்கு இந்தியன் 2 படத்தில் மேக்கப் மிகப் பிரமாதமாக இருக்கும் என கூறி இருக்கிறார். இதிலிருந்து இந்தியன் 2 படத்தில் வரும் இந்தியன் தாத்தாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என தெரிகிறது.
