Connect with us

Cinema News

ஒரே ஒரு லெட்டர்தான் போட்டேன்!.. பணத்தை அனுப்பிட்டார்!.. விஜய் சேதுபதியை புகழும் பிரபலம்!..

எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு அதிக சம்பளம் மற்றும் புகழ் என எல்லாமே கிடைப்பது சினிமா துறைதான். அதனால்தான் அதில் நுழைய பலரும் ஆசைப்படுகிறார்கள், பணம், புகழ் மட்டுமில்லாமல் ஒரு ரசிகர் கூட்டமும் கிடைக்கும். அதன் மூலம் பின்னாளில் அரசியலிலும் நுழைந்து காசு பார்க்கலாம் என்பதே பலரின் ஆசையாக இருக்கிறது.

அதே சினிமாவில் மற்றவர்களுக்கு உதவுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தான் சம்பாதித்த பணத்தில் 70 சதவீதத்திற்கு மேல் தானமாகவே கொடுத்தவர் எம்.ஜி.ஆர். கஷ்டம் என யார் வந்தாலும் அவர்களின் தேவைக்கு மேல் பணம் கொடுப்பார். அதனால்தான் அவரை அப்போது வள்ளல் என சொன்னார்கள். எம்.ஜி.ஆர் வீட்டுக்கு போனால் உதவி கிடைப்பது உறுதி என நம்பிய காலம் அது.

இதையும் படிங்க: நீ என்ன சொல்றது? நான் என்ன கேட்குறது? விஜய் சேதுபதியின் ஆசைக்கு குறுக்கே நிற்கும் மகன்

அவருக்கு பின் விஜயகாந்துக்கு அந்த புகழ் கிடைத்தது. நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவுவார், இரக்க சிந்தனை கொண்டவர். கஷ்டம் என போனால் கை கொடுத்து தூக்கிவிடுபவர் என்கிற இமேஜ் விஜயகாந்துக்கு மட்டுமே கிடைத்தது. பல புதிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகம் செய்து தூக்கிவிட்டவர் இவர்.

சினிமாவில் உதவி என போனால் தட்டி கழிப்பவர்களே பலரும் இருப்பார்கள். கோடி கோடியாக சம்பாதித்தாலும் கொடுக்க மனம் இருக்காது. பேரிடர் வந்து மக்கள் பாதிக்கப்பட்டாலும் நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட 5 லட்சம், 10 லட்சம் என கிள்ளி கொடுப்பார்கள்.

rajan

rajan

அதேநேரம், அவர்களை விட மிகவும் குறைவான சம்பளம் கூட யாருக்கும் தெரியாமல் பலருக்கும் உதவி செய்வார்கள். அதில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. திரைத்துறையை சேர்ந்த பலருக்கும் உதவி செய்திருக்கிறார். போண்டா மணி மருத்துவமனையில் இருந்தபோது கூட பணம் கொடுத்து உதவினார்.

இந்நிலையில், நடிகர்களை சகட்டு மேனிக்கு கிழிக்கும் தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய் சேதுபதி தங்கமான மனிதர். தர்ம சிந்தனை கொண்டவர். ஒருமுறை தயாரிப்பாளர் சங்கம் நிதி நெருக்கடியில் இருப்பதாக அவருக்கு கடிதம் எழுதினேன். உடனே ஆன்லைனில் ஒரு லட்சம் ரூபாயை அனுப்பிவிட்டார்’ என அவர் சொல்லி இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top