கூட நடிக்கிறவங்களையே கண்டுக்க மாட்டாரு!.. இவர் சிஎம் ஆகப் போறாரா?.. விஜய்யை விளாசிய காமெடி நடிகர்!..

Published on: June 14, 2024
---Advertisement---

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து விரைவில் முழுநேர அரசியல்வாதியாக மாற காத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அதிகபட்சமாக 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில், அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கிளி மூக்கு ராமசந்திரன் எனும் காமெடி நடிகர் நடிகர் விஜய் அரசியல் வருவதெல்லாம் இருக்கட்டும் முதலில் கூட நடிக்கிற நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்யட்டும் என பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: பாரதிராஜாவை நம்பாத பாக்கியராஜ்… அப்படி என்ன நடந்தது இந்த சிஷ்யனுக்கு..?

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், வரும் ஜூன் 22-ஆம் தேதி ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தை முடித்துவிட்டு தளபதி 69-வது படத்தில் நடிக்க அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் வரை விஜய் சம்பளம் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்ட சினிமா பிரபலங்கள் யாரும் முன் வருவதில்லை என்றும் 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் கஷ்டத்தில் தவிக்கும் சக நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்களை ஏறெடுத்தும் பார்ப்பது கிடையாது. கூட நடிக்கிற சக நடிகர்களின் குடும்பங்களின் கஷ்டங்களை போக்கிய பின்னர் மக்களின் கஷ்டத்தை போக்குகிறேன் என அரசியலுக்கு விஜய் வரட்டும் என கிளி மூக்கு ராமசந்திரன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஹீரோயினுடன் ஒரே அறையில் ஒன்றரை மணி நேரம் தனியாக! பதற்றம் அடைந்த ஏவிஎம்.. பயமூட்டிய நடிகர்

மறைந்த சின்னக் கலைவாணர் விவேக் உடன் பல படங்களில் துணை காமெடி நடிகராக கிளி மூக்கு ராமசந்திரன் நடித்துள்ளார். விஜய்யுடன் விவேக் நடித்த சில படங்களிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் நலிவடைந்த கலைஞர்களாக பலர் அடிக்கடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வரும் நிலையில் எந்த ஒரு நடிகரும் அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தையும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. ஆனால் அரசியலுக்கு வந்து பொது மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என பேசுவது எல்லாம் வேடிக்கையாக உள்ளது என கிளி மூக்கு ராமசந்திரன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனராக இதுதான் காரணமாம்… யாருமே கேள்விப்படாத தகவலா இருக்கே..!

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.