அது சும்மா டிரெய்லரு! மெயின் பிக்சர் இனிமேதான் இருக்கு.. ‘குணா’வை கொண்டாடுவோமா?

Published on: June 14, 2024
kamal
---Advertisement---

Guna Movie: சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாகி ஒட்டுமொத்த ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் வெளியான இந்த படம் தமிழில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஒரு தாக்கத்தை தமிழ் ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அந்த படத்தில் அமைந்த குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலாகும்.

அதுவரை காதலர்களின் அடையாளமாக கருதப்பட்ட இந்த பாடல் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்குப் பிறகு நட்புக்கும் இந்த பாடல் ஒரு அடையாளமாக கருதப்பட்டது. அதிலிருந்து குணா குகை தேடி கொடைக்கானலுக்கு படையெடுத்தனர் ஒட்டுமொத்த ரசிகர்கள். அங்கு சென்று குணா குகைக்கு கீழே நின்று புகைப்படங்களை எடுத்தவாறு பல புகைப்படங்கள் இணையதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: அந்தப் படத்தால் ஃபீல் பண்ணி அழுத சூர்யா! எப்படி மீண்டு வந்தார் தெரியுமா? பிரபலம் சொன்ன தகவல்

இது மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்த வெற்றியாக மாறியது. அதே சமயம் குணா படத்திற்கும் கிடைத்த வெற்றியாக கருதப்பட்டது. ஆனால் 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த குணா திரைப்படம் வெளியான நேரத்தில் விமர்சன ரீதியாக தோல்வியையே தழுவியது. இருந்தாலும் அந்தப் படம் இந்த காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அந்த ஒரு பாடலுக்காக படத்தை கொண்டாடிய நம் தமிழ் ரசிகர்கள் குணா படத்தை கொண்டாடாமல் இருப்பார்களா? அதனால் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க இந்த குணா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி கமலை வைத்து ஒரு படம் கூட எடுக்கலயே! காரணம் என்ன தெரியுமா? டி. ஆரே சொல்லியிருக்காரு பாருங்க

21ஆம் தேதி திரையரங்குகளில் குணா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது என்ற ஒரு செய்தியும் வெளியாகியிருக்கிறது. மறுபடியும் கொடைக்கானலுக்கு படையெடுக்க ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டியது தான். ஏற்கனவே இந்தியன்  படத்தை ரி ரிலீஸ் செய்து கமல் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இப்போது குணா படத்தையும் ரி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தை இயக்குனர் சந்தான பாரதி இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

இதையும் படிங்க: தூக்கலான கிளாமரில் நடிகைங்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லி!.. சினிமாவுல நடிக்க போறீங்களா?!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.