Cinema History
இது எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கதை!.. சிவாஜி சொல்லியும் கேட்காத இயக்குனர்!.. படமோ பிளாப்!..
திரையுலகை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு இமேஜ் உண்டு. குறிப்பாக பெரிய நடிகர்கள் எனில் அவர்களுக்கு எல்லா கதைகளையும் செட் ஆகாது. தனுஷ் நடிக்க வேண்டிய கதையில் கமல் நடித்தால் சரியாக வராது. இதுபோல பல உதாரணங்களை சொல்ல முடியும்.
அந்தந்த நடிகரின் மீது ரசிகர்களுக்கு என்ன இமேஜ் இருக்கிறதோ அதை புரிந்து கொண்டு அதற்கேற்ற கதையில் அந்த நடிகர் நடித்தால் மட்டுமே படம் வெற்றி பெறும். அதை விட்டுவிட்டு பரிசோதனை முயற்சி என்கிற பெயரில் ரிஸ்க் எடுத்தால் பெரும்பாலும் அது தோல்வியிலேயே முடியும்.
இதையும் படிங்க: அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் செட் ஆகும்!. வேற எவனுக்கும் வராது!.. ஓப்பனா சொன்ன சிவாஜி!..
இதற்கு திரையுலகில் பல உதாரணங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆர் துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே ரசிகர்களின் மனதில் இமேஜை ஏற்படுத்தினார். வாள் வீச்சி, கத்தி வீச்சி, மல்யுத்தம் என அவரின் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பும். ஆனால், சிவாஜி கணேசன் தேர்ந்தெடுத்த ரூட்டு வேறு.
நல்ல கதை, அதில் நல்ல கதாபாத்திரம், செண்டிமெண்ட் காட்சிகள் என அவர் தேர்ந்தெடுத்தது வேறு. எம்.ஜி.ஆர் மாஸ் ஹீரோ எனில், சிவாஜியோ நடிகர் திலகமாக மாறினார். ஆக்ஷன் காட்சிகள் கொண்ட கதைகள் தனக்கு வந்தால் ‘இது அண்ணன் எம்.ஜி.ஆர் செய்தால் மட்டுமே சரியாக இருக்கும்’ என சொல்லி அனுப்பிவிடுவார் சிவாஜி.
இதையும் படிங்க: என்னை அந்த மாதிரி பேசறாங்கன்னு வருந்திய சிவாஜி… காமெடி படம் தயார் செய்து அசத்திய இயக்குனர்…!
ஒருமுறை இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா சிவாஜியிடம் சென்று ஒரு கதை சொன்னார். அதில், ஆக்சன் காட்சிகள் இருந்தது. இது எனக்கு செட் ஆகாது. நான் போலீஸ் அதிகாரியாக வைத்து கெட்டவர்களை கைது செய்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரை வைத்து எடுங்கள்’ என சொன்னர் சிவாஜி.
ஆனால், ராமண்ணா கேட்கவில்லை. இந்த படத்தில் நீங்கள் நடித்தால் உங்களுக்கும் ஆக்ஷன் ஹீரோ இமேஜ் உருவாகும் என சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார். அப்படி வெளியான படம்தான் தங்கச்சுரங்கம். 1969ம் வருடம் வெளிவந்த இந்த திரைப்படம் சிவாஜி ரசிகர்களையே கவரவில்லை. எனவே, இப்படம் தோல்வி அடைந்தது.