Cinema History
கண்ணதாசன் பாடலைப் பாட முடியாமல் ஓடிய சந்திரபாபு… அதுல நடந்த களேபரத்தைப் பாருங்க..!
பலருடைய எதிர்ப்பையும் மீறி சந்திரபாபுவைக் கதாநாயகனாக வைத்து கண்ணதாசன் ‘கவலையில்லாத மனிதன்’ என்று ஒரு படத்தைத் தயாரித்தார். எல்லாரும் சொல்றாங்க என்னன்னா சந்திரபாபுவை வச்சி சமாளிக்க முடியாது. அவரைக் கதாநாயகனா போட்டா பெரிய பிரச்சனை வரும் என்கிறார்கள். அதன்பிறகு அவருக்கு அது பெரிய தலைவலியா போச்சு.
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற சொற்பொறழிவில் கண்ணதாசன் இந்தப் படத்தைப் பற்றி இப்படி சொல்லி இருக்கிறார். நான் கவலை இல்லாத மனிதன்னு ஒரு படம் எடுத்தேன். அதுல வந்த கவலை போக பல வருடங்கள் ஆச்சு. ஆண்டவன் கிட்ட இப்படி சவால் விடக்கூடாது. மனுஷன்னா கவலையோட தானே இருப்பான் என்றாராம்.
இதையும் படிங்க… ரஜினி படத்திற்கு கமல் செய்த உதவி… மறக்க முடியாமல் இயக்குனர் சொன்ன தகவல்
அந்தக் காலகட்டத்தில் சந்திரபாபு எந்தப் படத்தில் நடித்தாலும் அதில் அவர் பாடி ஆடுவது போல ஒரு பாடலாவது இருக்கும். புத்தியுள்ள மனிதர் எல்லாம் என்ற பாடல் கூட அந்த வகையைச் சார்ந்தது தான்.
எம்எஸ்வி. ‘நீ ஆடுறதுக்கு உனக்கு டப்பாங்குத்து பாட்டு தான் லாயக்கு’ என்றாராம். அதற்கு சந்திரபாபு, ‘இல்ல நான் ஆடல. பாடிக்கிட்டே நடந்து போறேன். அதுக்கு ஏத்த மாதிரி பாட்டு ரெடி பண்ணுங்க’ன்னு சொன்னாராம். இதை உடனே கண்ணதாசன் கிட்ட எம்எஸ்வி. சொன்னாராம். அதற்கு அவரும் ஓகே சொல்லி விட்டாராம்.
இதற்கிடையில் கண்ணதாசனின் நெருங்கிய நண்பரான பட்டுக்கோட்டை கண்ணதாசன் இறந்து விடுகிறார். அதனால் ஒரு வாரம் துக்கத்தில் இருக்கிறார் கண்ணதாசன். அதனால் அவரால் பாடல் எழுத முடியவில்லை.
அப்போது சந்திரபாபு ‘ஏன் பட்டுக்கோட்டை இறந்ததை வைத்து ஒரு பாடல் நீங்கள் எழுதலாமே… அதையே இந்தப் படத்தில் வைத்து விடுவோம்’ என சொல்கிறார். ‘ஒரு மனுஷன் செத்துப் போனா அப்பாட செத்துட்டான்டான்னு சொல்லக்கூடாது. எல்லாரும் அவனுக்காக அழணும்.
அப்போ தான் அவன் நல்ல மனுஷன். உங்க நண்பர் அப்படிப்பட்டவர். இதையே கருத்தா வச்சி எழுதுங்க’ன்னு சந்திரபாபு சொல்லவும் கண்ணதாசனுக்குப் பொறி தட்டுகிறது. ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ என்ற பாடலை எழுதுகிறார்.
மனிதன் அழுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இயற்கை அழுதால் உலகம் செழிப்பாகிறது. அதனால் எப்பவும் சோகமா இல்லாம சந்தோஷமாக இருங்க என இந்தப் பாடலில் கருத்தாக வைத்து கண்ணதாசன் எழுதியுள்ளார்.
இந்த வரிகளுக்கு உணர்ச்சிகளைக் கொடுத்துப் பாடுவது ரொம்ப சிரமம். அதனால் வேறு ஒரு பாடகர் டிஎம்எஸ் வைத்துப் பாட வைப்போம் என எம்எஸ்வி. சொல்கிறார். ஆனால் சந்திரபாபு ‘நானே பாடுகிறேன்’ என்கிறார். இசை அமைப்பாளர் சொல்வதை சந்திரபாபு கேட்க மாட்டார்.
அவர் இஷ்டத்திற்குத் தான் பாடுவார். எம்எஸ்.வி. இந்தப் பாடலுக்கு கண்டிஷன் போட சந்திரபாபுவும் ‘ஓகே’ சொல்கிறார். அதன்படி சந்திரபாபு பாடியது எம்எஸ்வி.க்கு திருப்தி இல்லை. தொடர்ந்து அவர் பாடினாலும் எம்எஸ்வி.க்கு திருப்தி இல்லை. டென்ஷனில் டிரஸ் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு உள்ளாடையுடன் நின்று பாடினாராம். அப்போதும் திருப்தி இல்லையாம்.
இதையும் படிங்க… கல்கியில் கமல் நடிக்க சம்மதிச்சதுக்கு இதுதான் காரணமா? என்ன ஒரு புத்திசாலித்தனம்?!
சந்திரபாபு காரை எடுத்து விட்டு வேகமாக ஒரு இடத்திற்குப் போய் மரத்தடியில் போய் தலையில் கைவைத்து உட்கார்ந்து விடுகிறார். அதன்பிறகு அவர் பொறுமையாக எம்எஸ்வி. சொன்னதை நினைத்து உணர்ச்சியுடன் பாடுகிறார்.