கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்த படம் அவ்வை சண்முகி. இந்தப் படத்தில் கமல் வயதான மாமி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். எத்தனையோ நடிகர்கள் பெண் வேடங்களில் நடித்து இருக்கலாம். ஆனால் கமல் நடித்தால் அது தனி ரகம் தான்.
உதாரணத்திற்கு இந்தப் படத்தில் கமல் மாமி கெட்டப்பில் நடித்ததோடு மட்டுமல்லாமல் மிமிக்ரி செய்து மாமியாகவே ஒரு பாடலையும் சொந்தக்குரலில் பாடி அசத்தியிருப்பார். அது ருக்கு ருக்கு என்ற பாடல். அந்தப் பாடலில் குரலிலும் நளினம் காட்டியிருப்பது தான் ஹைலைட். பாடலுக்கு அவர் நடித்து இருந்த விதம் தாய்க்குலங்களை சுண்டி இழுத்தது என்றே சொல்லலாம்.
அந்த சமயத்தில் ‘கமல் மாமியாக நடிக்கிறாமே’ என்று பேசிப் பேசியே திரையரங்குளில் பெண்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் இந்த வேடம் போடுவதற்கு அவர் கொடுத்த உழைப்பு தான் அதோட வெற்றியின் ரகசியம். இதுகுறித்து படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

கமல் அர்ப்பணிப்பு மிக்க நடிகர் என்பது நமக்குத் தெரியும். அந்த வகையில் அவ்வை சண்முகி படத்திற்கு அவருக்கு அந்த வயதான பெண்மணி கெட்டப்புக்கு மேக்கப் போட்டோம். அவரால் வாயைக்கூட திறக்க முடியாது. அதனால் மேக்கப் போடுறதுக்கு முன்னாடியே அதாவது அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு விடுவார். அதன்பிறகு வெறும் ஜூஸ் தான் அவருக்கு சாப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக கமல் படங்களில் மேக்கப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் தருவார். அபூர்வசகோதரர்கள், இந்திரன் சந்திரன், அவ்வைசண்முகி, இந்தியன், அன்பே சிவம், தசாவதாரம் படங்களைப் பார்த்தாலே தெரியும். அவ்வை சண்முகி படத்திற்கு பிராஸ்தெடிக் மேக்கப் போட 4 மணி நேரம் ஆகுமாம். அதுவும் குறிப்பிட்ட நேரம் வரை தான் அது அப்படியே இருக்கும்.
இதையும் படிங்க… இதெல்லாம் ஒரு படமா?!.. மணிரத்னம் படம் பார்த்துவிட்டு நடிகரை திட்டிய ராஜ்கிரண்!…
அதற்குள் படமாக்கி விட வேண்டும். அந்த நேரத்தைத் தாண்டினால் அது உருகி விடும். அப்படிப்பட்ட சூழலில் திரும்பவும் மேக்கப் போட 4 மணி நேரம் ஆகும். அது வரை பொறுமையாக இருக்க வேண்டும். இதுதான் படத்தின் உயிர் என்றால் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கிடுபவர் தான் கலைஞானி கமல்.





