Connect with us
Kamal

Cinema News

உலக நாயகனுக்கே பயமா…? தன்னைத் தக்க வைக்கப் போராடும் கமல்…! வேறு கோணத்தில் சிந்தித்த பிரபலம்..!

உலகநாயகன் கமல் தற்போது பிரபாஸ் நடித்த கல்கி 2898 AD படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். இது பற்றி எல்லா ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் வரும் 27ம் தேதி வருகிறது. இதையொட்டி பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

கமலைப் பொருத்தவரை நடிகர் என்பதை விட பன்முகக் கலைஞர். அவருக்கு இசை நல்லா தெரியும். நல்லா பாடுவாரு. நடனம் முழுமையா தெரியும். அவர் பாடிய பாட்டை இன்னொருவர் பாடுறது சிரமம். சிறந்த எடிட்டர். சிறந்த டான்சர். நாயகன் படத்துல நான் டான்ஸ் பண்ண மாட்டேன். எனக்கு டான்ஸ் வைக்காதீங்கன்னு சொன்னாரு. படத்துக்குத் தேவைன்னா மட்டுமே டான்ஸ் வைப்பாங்க.

இதையும் படிங்க… டெரர் இயக்குனர் படத்தில் நடிகையை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட சூர்யா!.. இவ்வளவு கஷ்டப்பட்டாரா!…

சினிமாவில் எம்ஜிஆரையும் தாண்டி கூடுதலாக திறமை உள்ளவர் கமல். கட்சியை ஆரம்பிச்சிட்டு அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை லேட்டா புரிஞ்சிக்கிட்டாரு. அதனால கட்சியையும் கலைக்காம வச்சிருக்காரு.

கல்கியைப் பொருத்தவரை அது பிற்போக்கான படம். புராணப்படம் எடுக்கறது தப்பில்ல. கர்ணன் ஒரு விஷயத்தைச் சொல்லும். சரஸ்வதி சபதம் படம் ஒரு பட்டிமன்றம். கல்வியா, செல்வமா, வீரமான்னு கொண்டு போயிருப்பாங்க. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை திருவிளையாடல் படத்தில் பார்த்தால் பசுமரம் என்ற பாடலில் சொல்லியிருப்பார்கள்.

Kali

Kali

கல்கி படத்துல 90 சதவீதம் பிற்போக்கு அரசியல் இருக்கு. பிரபாஸ் கடைசியாக நடித்த ஆதிபுருஷ் என்பது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். சீதை பட்ட துன்பத்தைக் கூட சொல்லல. கல்கி படத்துல கமல் ஏன் நடிக்கிறாரு? தன்னைத் தக்க வைப்பதற்கா என்ற கேள்வி எழுகிறது. இந்தியன் 2, தக் லைப்னு தொடர்ச்சியா படங்கள் வருது. அவரே உலகநாயகன் தானே. இவர் ஏன் அங்கே போய் வில்லனா நடிக்கணும்? இன்னொன்னு என்னன்னா அவருக்கே பயம் இருக்கான்னு தோணுது.

ட்ரெண்டு மாறிடுச்சுன்னு பயம் வருதோ? எம்ஜிஆருக்கே பயம் வந்துடுச்சு. 70களில் ஜெயலலிதாவே பழைய ஹீரோயினா ஆகிட்டாங்க. முடி நிறைய வைத்தது, சட்டைக் காலரை பெரிசாக்குவது, உரிமைக்குரல் படத்தில் தெலுங்கு ஹீரோ மாதிரி, சப்பல்லா அது மாதிரி போட்டுருப்பாரு.
மஞ்சுளா, லதா தான் அப்போ அவருக்கு மெயின் ஹீரோயின். இப்படி எல்லாம் மாறணும்னு எம்ஜிஆருக்கு யாரோ சொல்லிருக்காங்க. அந்த வகையில்

கமல் சிறந்த படைப்பாளி. யாரும் சொல்லக்கூடாத விஷயத்தைத் தைரியமாகச் சொல்லக்கூடியவர். தலைமுறை மாற்றத்தில் தன்னைத் தக்கவைக்கறதுக்காக இப்படி கமல் நடிச்சிருக்காரான்னு தோணுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top