கடைசி நேரம் நெருங்க நெருங்க!.. கதி கலங்கி நிற்கும் கல்கி படக்குழு?.. எங்கேயுமே ஹைப் இல்லை!..

Published on: June 19, 2024
---Advertisement---

பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்டப் படமான கல்கி 2898 ஏடி படம் இன்னும் 8 நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இந்தியாவில் தெலுங்கு திரை உலகத்தை தவிர்த்து வேறு எங்கேயும் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது படக்குழுவினர்களை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரபாஸின் கல்கி திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவில் இதுவரை 200 கோடி ரூபாய் வரையிலான பிசினஸ் மட்டுமே நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். கமல்ஹாசன் நடித்தும் கடைசி வரை அவரை புரோமோஷன்களில் சரியாக பயன்படுத்தாத நிலையில், தமிழ்நாட்டில் விநியோகஸ்தர்கள் கல்கி படத்தை கண்டுக்கவே இல்லை என்கின்றனர்.

இதையும் படிங்க: கோட் படத்தில் நடித்த பிரசாந்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. நம்பவே முடியலயேப்பா!…

அதற்கு முழு காரணம் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சலார் திரைப்படம் தமிழில் பெரிதாக ஓடவே இல்லை. மேலும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், விநியோகஸ்தர்கள் கல்கி படத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஹிந்தியிலும் இதே நிலமை தான் நிலவுவதாக கூறுகின்றனர். இத்தனைக்கும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி என ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்களை படத்தில் நடிக்க வைத்த நிலையிலும், கடைசி வரை புரோமோஷன்களுக்கு எந்த ஒரு பாலிவுட் நடிகர்களும் பெரிதாக ஆர்வம் காட்டாத சூழல் நிலவி வருவதால் அங்கேயும் படம் செல்ஃப் எடுப்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சரக்கு ஊற்றி!.. அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட தம்பி ராமையா மகன்!.. ஒரே மஜா தான் போல!..

கல்கி படத்தை பிரம்மாண்ட இதிகாச புராண படமாக புரமோட் செய்யாமல் வெறும் புஜ்ஜி கார் படமாக இயக்குநர் நாக் அஸ்வின் புரமோட் செய்ததன் விளைவு தான் இப்படி படம் தத்தளித்து வருவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. கடைசி நேரத்தில் கல்கி படத்தை எப்படியாவது ரசிகர்கள் பார்க்கும்படி செய்வதற்காக இன்னொரு டிரைலரை வெளியிடும் முடிவுக்கு படக்குழு தற்போது வந்திருப்பதாகவும் இன்னும் சில தினங்களில் அந்த ட்ரைலரை வெளியிடப் போவதாகவும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

கல்கி திரைப்படத்துக்கு போதிய வரவேற்பு இல்லாத சூழலை புரிந்து கொண்டுதான் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் சில மாதங்களுக்கு பின்னர் தங்கள் படத்தை வெளியிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இனிமே படங்களே வேணாம்!.. கடையை மூடும் லைக்கா!… சொந்த ஊருக்கே போகும் சுபாஷ்கரன்!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.