Cinema News
வாசல் வரைக்கும் வந்த மகாலட்சுமியை திருப்பி அனுப்பிய நடிகர்! ‘மகாராஜா’ படத்தில் இவர் நடிக்க வேண்டியதா?
Maharaja Movie: தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி ஒரு தன்னிகரற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். அனைவரிடமும் எதார்த்தமாகவும் சகஜமாகவும் பழகக்கூடியவர். அதனாலேயே இவரை மக்கள் செல்வன் என்று அனைவரும் அழைத்து வருகின்றனர். சமீபத்தில் இவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது .
பொதுவாக பெரிய பெரிய நடிகர்களுக்கு அவர்களுடைய 50ஆவது படம் தோல்வியை தழுவியது. ஆனால் விஜய் சேதுபதிக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறது. அதுவும் சமீப காலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவு சரியாக போகவில்லை. ஆனால் அவருடைய ஐம்பதாவது படம் அவருக்கு ஒரு பெரிய கிப்ட் கொடுத்திருக்கிறது .
இதையும் படிங்க:பகுத்தறிவு கட்சியில் இருந்தாலும் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஜோதிட நம்பிக்கை!.. ஆச்சர்ய தகவல்!..
இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு முன்பு இந்த மகாராஜா திரைப்படத்தில் நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு மறுபடியும் நித்திலன் தயாரிப்பாளர் சுதனுடன் இணைந்து ஒரு படத்தை எடுப்பதாக அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு இருந்தாராம்.
அதனால் மகாராஜா கதையை தயார் செய்ததும் சுதனிடம் போய் சொல்லி இருக்கிறார் .சுதனுக்கும் இந்த கதை பிடித்து போய் இருக்கிறது. உடனே நித்திலன் இந்த கதைக்கு விஜய் ஆண்டனி நன்றாக இருப்பார் என நினைத்து அவரிடமும் போய் கதை சொல்லி இருக்கிறார். விஜய் ஆண்டனிக்கும் இந்த கதை மிகவும் பிடித்துப் போயிருக்கிறது.
இதையும் படிங்க: நடிகையோட விருப்பத்தை நிறைவேற்றிய கேப்டன்… அந்த விஷயத்துல ரொம்பவே பெரிய மனசுக்காரர் தான்..!
ஏற்கனவே விஜய் ஆண்டனியும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயனும் சேர்ந்து மூன்று படங்கள் பண்ணுவதாக அக்ரிமெண்ட் கையெழுத்தாகி இருந்ததாம். அதனால் இந்த படத்தை தனஞ்செயனை வைத்து தயாரிக்கலாம் என விஜய் ஆண்டனி நித்திலனிடம் கூறியிருக்கிறார். ஆனால் நித்திலன் தனக்கு இருந்த ஒப்பந்தத்தை பற்றி கூற விஜய் ஆண்டனியிடம் கூற நேராக விஜய் ஆண்டனி சுதனிடம் வந்து பேசி இருக்கிறார்.
ஆனால் சுதன் இந்த படத்திற்கு நான் விஜய் சேதுபதியை தான் நினைத்திருக்கிறேன். அவரை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார். இந்த பேச்சுவார்த்தை அப்படியே போக ஒரு கட்டத்தில் சுதன் இந்தப் படத்தில் வரும் ஷேரில் 50 சதவீதம் நான் எடுத்துக் கொள்கிறேன். மீதி 50 சதவீதம் நீங்கள் பிரித்துக் கொள்ளுங்கள் என கேட்டாராம்.
இதையும் படிங்க: ஆகஸ்டு 15ஐ குறி வைக்கும் 5 படங்கள்!.. விக்ரமுக்கு ஒரு ஹிட் கிடைக்குமா?!…
ஆனால் விஜய் ஆண்டனியை சுற்றி இருந்தவர்கள் ஒரு ஷேர் முழுவதும் அவருக்கு. மீதி ஷேர் நாம் எல்லோரும் சேர்ந்து பிரித்துக் கொள்வதா? என நினைத்து வேண்டாம் என கூற தனஞ்செயன் இந்த ப்ராஜெக்ட் இருந்து விலகி விட்டாராம். அதன் பிறகு விஜய் ஆண்டனியும் இந்த படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. கடைசியில் விஜய் சேதுபதி இந்த படத்தில் வந்து நடித்திருக்கிறார். இப்போது இந்த படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தாலும் விஜய் ஆண்டனிக்கு இந்த படத்தை பார்க்கும் பொழுது ஐய்யய்யோ படத்தை மிஸ் பண்ணி விட்டோமே என்றுதான் வருந்துவார் என இந்த செய்தியை பகிர்ந்த வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.