Connect with us
Sridhar PKK

Cinema News

ஸ்ரீதர் சொன்னது 3 மணி நேரம்… அதை ரெண்டே வரியில தட்டித் தூக்கிய பட்டுக்கோட்டையார்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் புகழின் உச்சியில் இருந்த போது அவரை வைத்து தன்னோட படங்களில் எல்லாப் பாடல்களையுமே எழுத வைக்கணும்னு நினைத்தவர் இயக்குனர் ஸ்ரீதர். தான் எடுக்கப்போகும் அடுத்த படத்தின் கதையைப் பற்றி 3 மணிநேரமா சிலாகித்துச் சொன்னாராம்.

அதைக் கேட்டுக் கொண்டு இருந்த பட்டுக்கோட்டை அழகா ரெண்டே வரிகளில் சொன்னாராம். அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஸ்ரீதர் இதையே பாடலாக மாற்றிக் கொடுங்கன்னு கேட்டாராம். அப்படித்தான் அந்தப் பாடல் உருவானது.

இதையும் படிங்க… பாலசந்தர் போன்ல பேசுனாருன்னா ரஜினியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் தெரியுமா?

ஸ்ரீதர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தான் கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் வளர்ந்து வந்தார். அந்த நேரத்தில்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி அறிந்த ஸ்ரீதர் ஆச்சரியப்பட்டார். ‘இந்த வயதில் இவ்வளவு திறமையா’ என வியந்தார். அதனால் தன்னோட முதல் படத்துக்கு அவரை வைத்தே எல்லாப் பாடல்களையும் எழுத வைக்கணும்னு தீர்மானித்தாராம்.

ஸ்ரீதர் தன்னோட முதல் படமான ‘கல்யாணப்பரிசு’ கதையைத் தான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு 3 மணிநேரமா சொன்னார். அக்காவுக்காக தங்கச்சி தன்னோட காதலையே திருமணம் செய்கிறார் என்பது தான் படத்தின் மையக்கதை. இதை சுருக்கமாகவே சொல்லலாமே என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னார்.

உடனே நாம பல நாளா யோசிச்சி யோசிச்சி எழுதுன கதையை எப்படி இவரு ரெண்டு வரில சுருக்கமா சொல்வாருன்னு ஆச்சரியத்துல கேட்டாராம். அதுக்கு ‘என்னங்க உங்க கதை, காதலிலே தோல்வியுற்றான் கன்னி ஒருத்தி, கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி… இதுதான உங்க கதை’ன்னு பட்டுக்கோட்டை சொன்னாராம்.

இதைக் கேட்டதும் ரொம்பவே ஆச்சரியப்பட்டாராம் ஸ்ரீதர். அதன்பிறகு ‘ஆமாம் கவிஞரே… நீங்க சொன்ன அந்த 2 வரிகளிலே அந்தக் கதை இருக்கு. ஆனா அதை முழுபாடலாகவும் எழுதிக் கொடுங்க’ன்னு கேட்டு வாங்கினாராம். இந்தப் பாடலும் இந்தப் படம் ஹிட்டாக காரணமாம்.

இதையும் படிங்க… பாட்டுலாம் ஹிட்! படம் பிளாப்… இளையராஜா தயாரிப்பதையே நிறுத்துனதுக்கு இதுதான் காரணமாம்!

காதல் பாடலான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ பாடலையும் பட்டுக்கோட்டையார் தான் எழுதியுள்ளார். இதன் மூலம் பட்டுக்கோட்டையாருக்கு சமூகப்பாடல்கள் மட்டும் அல்ல. காதல் பாடல்களும் நல்லா வரும் என்பது தெரியவந்தது.

கல்யாணப்பரிசு படம் அப்போது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த படம். தமிழ்சினிமா வரலாற்றிலேயே இது ஒரு மைல் கல். அத்தனை பாடல்களும் ஹிட் தான். வாடிக்கை மறந்தது ஏனோ, ஆசையினாலே மனம், உன்னைக் கண்டு நான், துள்ளாத மனமும், காதலிலே தோல்வியுற்றாள், மங்கயர் முகத்தில் ஆகிய முத்து முத்தான பாடல்கள் உள்ளன. ஏ.எம்.ராஜா இசை அமைத்தார். ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி, தங்கவேலு, நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் 1959ல் வெளியானது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top