Connect with us
IR

Cinema History

பாட்டுலாம் ஹிட்! படம் பிளாப்… இளையராஜா தயாரிப்பதையே நிறுத்துனதுக்கு இதுதான் காரணமாம்!

ஆனந்தக்கும்மி படத்தில் 10 பாடல்கள் உள்ளன. இது உறவுச்சிக்கல்களைச் சொல்லக்கூடிய படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்களை கங்கை அமரன், பஞ்சு அருணாசலம், வைரமுத்து 3 பேரும் எழுதியிருப்பாங்க. பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டா இருந்தாலும் படம் ஓடலை. அது ஏன்னு பார்ப்போம்.

இதையும் படிங்க… சீரியல் முடிஞ்ச கையோடு ‘வானத்தை போல’ குடும்பத்தில் இணைந்த ‘எதிர்நீச்சல்’ பிரபலம்.. சூப்பரு

‘ஒரு கிளி உருகுது… உரிமையில் பழகுது ஓ மைனா மைனா…’ என்ற பாடல். எஸ்.ஜானகி, எஸ்.பி.சைலஜா இருவரும் பாடியிருப்பாங்க. இந்தப் பாடலில் குழந்தைகள் அன்பை அழகாகச் சொல்லி இருப்பார்கள். சந்தூர், வயலின், புல்லாங்குழல், கித்தார் என பல கருவிகளைப் பயன்படுத்தி இளையராஜா அருமையாக இசை அமைத்து இருப்பார்.

இந்தப் பாடலில் கிளியைப் பற்றி மைனாவிடம் சொல்லியிருப்பாரு. ஏன் மைனாக்கிட்ட சொன்னாருன்னா இரண்டுமே பேசக்கூடியது. குழந்தைகள் மாதிரியே அப்பழுக்கு இல்லாதது.

அதற்கு அடுத்த வரிகளில் குறும்புகள் தொடருது, ‘அரும்புகள் மலருது ஓ மைனா மைனா…’ என்று சொல்லிவிட்டு, ‘தளிரிது மலரிது தானா… இது ஒரு தொடர்கதை தானா’ன்னு கேட்டு இருப்பார் வைரமுத்து. தளிர் எப்படி மலரும்னு கேட்டா, குழந்தைகள் விளையாட விளையாட அங்கு நட்பு மலரும். அதைத் தான் சொல்லியிருப்பார்.

அந்தக்காலத்தில் இந்தப் படத்தில் 10 பாடல்கள் இருந்தன. அவற்றை அன்னைக்கு இருந்த தொழில்நுட்ப காரணத்தால அதை சென்னையில பண்ண முடியாம மும்பைல போய் பதிவு பண்ணினாங்க. ஆனாலும் படம் ஓடலை. இதுக்கு என்ன காரணம்னா உறவுச்சிக்கல்களை அப்போ அழகா எடுக்கிறவரு பாலசந்தரும், பாலுமகேந்திராவும் தான்.

கவிஞர் வைரமுத்து இந்தக் கதையை அவங்க இருவரில் யாராவது ஒருத்தர் தான் எடுப்பாங்கன்னு எழுதினாராம். ஆனா கதையைக் கேட்ட இளையராஜா ரொம்ப நல்லாருக்கு. நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்னு சொன்னாராம்.

இதையும் படிங்க… பாலசந்தர் போன்ல பேசுனாருன்னா ரஜினியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் தெரியுமா?

இந்தப் படத்தை பாவலர் பிக்சர்ஸ்னு தயாரிக்காம, தன்னோட பேருலயே இளையராஜா பிக்சர்ஸ்னு தயாரிச்சாராம். இயக்கினவர் அவரது நண்பர் பாலகிருஷ்ணன். ஆனா இந்தப் படத்துக்கு அப்புறம் இளையராஜா படமே தயாரிக்கல. ஏன்னா படம் ஓடல. அதுக்குக் காரணம் இந்தப் படத்தை இயக்கியதில் இருந்த சிக்கல்கள் தான்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top