Cinema News
கோட் படத்தை கைவிட்ட கலாநிதிமாறன்!.. சாட்டிலைட் உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களின் சாட்டிலைட்(டிவி) மற்றும் டிஜிட்டல் (ஓடிடி) உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்படும். இன்னும் சொல்லப்போனால், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தங்களின் சம்பளங்களில் பல கோடி உயர்த்தியதற்கு காரணமே ஓடிடி நிறுவனங்கள் கொடுத்த விலைதான்.
ஆனால், அப்படி பல கோடி கொடுத்து வாங்கும் படங்கள் ஓடிடியில் பெரிய வசூலை பெறவில்லை. எனவே, சமீபகாலமாக ஓடிடி நிறுவனங்கள் விலையை குறைந்துவிட்டது. ஆனால், உயர்த்திய சம்பளத்தை நடிகர்கள் குறைக்கவில்லை. சமீபத்தில் இது தொடர்பாக தயாரிப்பாளர் கூடிப்பேசினார்கள்.
இதையும் படிங்க: 150 ரூபாய்க்கு குவார்ட்டர் வாங்க காசில்லாம 50 ரூபாய்க்கு சாராயம் வாங்கி குடிக்கிறாங்க!.. பொங்கிய சூர்யா!..
அதில், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் படங்களோடு தயாரிப்பை நிறுத்திவிடுவோம். நடிகர்கள் சம்பளத்தை குறைத்தால் மட்டுமே அடுத்து படங்களை தயாரிப்போம் என முடிவெடுத்ததாகவும் செய்திகள் கசிந்தது. ஆனால், இதுவரை அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை..
விஜய் இப்போது நடித்து வரும் திரைப்பட,ம் கோட். விஜய் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் இது. இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை 55 கோடிக்கு சன் தொலைக்காட்சி வாங்கியது. ஆனால், கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கும், சன் டிவி கலாநிதி மாறனுக்கும் சில விஷயங்களில் ஈகோ பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே, சேட்டிலைட் உரிமையை கலாநிதி மாறன் திருப்பி கொடுத்துவிட்டார். இப்போது ஜீ தொலைக்காட்சி கோட் படத்தின் சேட்டிலைட் உரிமையை 75 கோடிக்கு வாங்கியிருக்கிறது. அதேநேரம், அட்வான்ஸ் தொகையாக 10 கோடியை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை 14 தவணையாகத்தான் ஜீ தொலைக்காட்சி நிறுவனம் கொடுக்கும் என்கிறார்கள்.
அதனால்தான் 20 கோடி சேர்த்து கொடுக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது. தமிழ் திரையுலகில் பல படங்கள் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை விற்கப்படாமல் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.