Cinema History
விஜயகாந்திடம் சொல்லப்பட்ட விஜய் பட கதை… என்ன நடந்ததுன்னு தெரியுமா?
எத்தனை இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றினீர்கள் என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கேட்ட கேள்விக்கு இயக்குனர் எழில் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
சினிமாவுல கமர்ஷியல், ஆர்ட், ஹீரோயிசம்னு பல வெரைட்டிஸ் இருக்கு. இதுல நாம எதை செலக்ட் பண்ணப் போறோம்னு நான் யோசிச்சேன். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். பாக்கியராஜ், மணிரத்னம், பாரதிராஜா என ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஸ்டைல் இருக்கும்.
எல்லாருடைய படத்தையும் காப்பி அடிக்க முடியாது. ஆனா ஹிட் மூவி கொடுக்கணும். அதுல பார்த்தா ஹிட் மூவின்னா எல்லாருக்கும் எல்லா விஷயமும் பிடிச்சிருக்கணும்.
பொதுவா எல்லா டைரக்டர்களுமே மக்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் எடுத்தால் தான் வெற்றியைக் கொடுக்க முடியும். வேற வேற ரூட்ல போனாலும் அந்த இடத்துல கொண்டு வந்து படத்தை சேர்க்கறதுல எல்லாருமே தெளிவா இருக்காங்க.
அதனால அவங்களோட பார்முலாவை மைண்ட்ல வச்சி அந்தப் பாயிண்ட்ட புடிச்சி படம் பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். அப்படி பண்ணின கதை தான் துள்ளாத மனமும் துள்ளும் கதை. அதுக்கு முன்னாடி சின்ன சின்ன பசங்களை வைத்து கதை பண்ணினேன்.
இதையும் படிங்க… தேவர் மகன் கதையை இப்படித்தான் எழுதினேன்!.. கமல் சொன்ன பதிலை பாருங்க!..
அதுக்கு தயாரிப்பாளர் வர மாட்டாங்கன்னு சொன்னாங்க. 90களில் ஆர்டிஸ்ட்டுக்குப் படம் பண்றதே கஷ்டம். அப்போ எனக்கு ஸ்கிரிப்ட் ரெடியானதும் நம்பிக்கை வந்துடுச்சு. தயாரிப்பாளரைப் பார்க்கப் போறேன். ஸ்கிரிப்ட் இருக்கும்போது அவங்களைத் தேடி கதை சொல்ற போது நமக்கு ஒரு தன்னம்பிக்கை வரும்.
நான், தரணி, வெங்கட்னு நிறைய பேரு ராவுத்தர் பிலிம்ஸ்ல இருப்போம். அப்போ இந்தக் கதையை கேப்டன் விஜயகாந்த் சாரிடம் சொல்ல அவர் ராவுத்தரிடம் போய்ச் சொல்னு சொன்னார்.
அவருக்கிட்ட சொன்னதும், இது யூத் ஹீரோவுக்குள்ள கதை. விஜயகாந்த் இப்போ ஆக்ஷன் பக்கம் போயிட்டாரு. அவரு அதுக்கு செட்டாக மாட்டாருன்னு சொல்லிட்டார்.
இதுக்கு இடையில பிரபு, கார்த்திக்னு பல ஹீரோக்களுக்கும் கதை சொன்னேன். பாண்டியராஜன், அன்பாலயா பிலிம்ஸ்னு நிறைய பேருக்கிட்ட சொன்னேன். அப்புறம் தான் கேப்டன். கடைசியா தான் வஜய் சம்மதம் கிடைச்சு படத்துல நடித்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.