Cinema News
மாணவர்களிடம் விஜய் கேட்ட கேள்வி… பலத்த கோஷத்துடன் அவர்கள் சொன்ன பதில்
தற்போது திருவான்மியூரில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு விஜய் சான்றிதழும், பரிசும் வழங்கி வருகிறார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசும்போது அவர்களும், பெற்றொர்களும் உற்சாகம் அடைந்தனர். என்ன பேசினார் என்று பார்க்கலாமா…
இதையும் படிங்க… என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? ஆதங்கப்பட்ட அஜித்.. பாவா லட்சுமணன் சொன்ன தகவல்
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதிலும் முழுமூச்சாக ஈடுபடுவேன். சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகுவேன் என்று தளபதி விஜய் சொன்னதில் இருந்தே தமிழக அரசியல் பரபரப்புக்குள்ளாகி விட்டது.
அந்த வகையில் தளபதி 69 தான் கடைசி படம் என்றும் சொல்கிறார்கள். இதற்கு இடையே விஜய் அரசியல் சார்பாக எந்த ஒரு மேடையும் போட்டு பேசவில்லை. இப்போது முதன்முறையாக மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில வார்த்தைகளைப் பேசினார்.
அப்போது அவர் நீங்க எல்லாம் இப்போது வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்குப் போகப் போறீங்க. எந்தப் படிப்பை தேர்ந்தெடுக்கலாம்கற கட்டத்துல இருக்கீங்க.
எந்தத் துறையை வேணாலும் தேர்ந்தெடுங்க. எல்லாமே நல்ல துறைகள் தான். ஆனா அதுல முழு ஈடுபாட்டோடு இருந்து பாருங்க. அப்போ தான் ஜெயிக்க முடியும். இன்னைக்கு உலகத்தரத்துல தமிழ்நாட்டுல தான் நல்ல டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வக்கீல்கள் எல்லாம் இருக்காங்க.
ஆனா நல்ல தலைவர்கள் மட்டும் இல்ல. நான் அரசியல் ரீதியா மட்டும் சொல்லல. நீங்க ஒரு துறைக்குப் போறீங்க. அதுல சிறந்து விளங்கினா அதுக்கு தலைமைப் பொறுப்புல நீங்க வரலாம்.
இதையும் படிங்க… ரசிகர்களிடம் இருந்து நடிகரை காப்பாற்றிய அஜீத்… என்ன ஒரு தெனாவெட்டுன்னு பாருங்க..!
அதைத்தான் நான் சொன்னேன். இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுறாங்கன்னு. எதிர்காலத்துல அரசியலும் உங்களுடைய ஒரு துறையா ஏன் வரக்கூடாது. ‘சரி. நல்ல படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா, வேண்டாமா…’ன்னு விஜய் கேட்க, ஒட்டுமொத்தமாக அனைவரும் ‘வரணும்’னு சொன்னாங்க. அதுக்கு ‘உங்க ஆர்வம் எனக்குப் புரியுது. ஆனா இப்போதைக்குப் படிங்க. அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொன்னார்.