Cinema News
கமல் ஊழலை தீவிரமாக ஒழிக்கும் காட்சி!.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் புளூசட்ட மாறன்..
தமிழகத்தில் ஊழலை ஒழிப்பது பற்றி பல வருடங்களாக சினிமாவில் காட்சிகள் வருகிறது. ஆனால் அது எல்லாம் சினிமாவோடு சரி. நிஜத்தில் ஒன்றும் நடக்காது. படத்தின் இறுதியில் ஊழல்வாதிகளை படத்தின் கதாநாயகன் மற்றும் பொதுமக்கள் தண்டிப்பது போலவும் காட்டுவார்கள். இதைப்பார்த்து ரசிகர்கள் கை தட்டுவார்கள்.
ஆனால், இதுவெல்லாம் சினிமாவோடு சரி. நிஜத்தில் ஒன்றும் நடக்காது. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் ஊழலை யாராலும் ஒழிக்கவே முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. ஊழல்வாதிகளை ஹீரோ தண்டிப்பது போல வந்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஷங்கர் இயக்கிய இந்தியன்.
1996ம் வருடம் வெளியான இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்க கவுண்டமணி, ஊர்மிளா, சுகன்யா, மனிஷா கொய்ராலா என பலரும் நடித்திருந்தார்கள். லஞ்சம் கேட்டு கொடுக்க மறுத்ததால் தனது மகளை இழந்த ஒரு சுதந்திர போராட்ட தியாகி கோபத்தில் பொங்கியெழுந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் பொதுமக்களிடம் எப்படி லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை அழகாக காட்டி இருப்பார் ஷங்கர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அதாவது இந்தியன் 2 படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்த படத்தில் இந்தியா முழுவதும் ஊழல் செய்யும் பெரிய மனிதர்களை இந்தியன் தாத்தா களையெடுப்பதுதான் கதை. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியானது. இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர்களின் செயல்பாடுகளை கிண்டலடிக்கும் யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் கமல் திரைப்படங்களில் மட்டும் ஊழலை ஓழிக்கும் காட்சி என பதிவிட்டு ஒரு ஸ்வீட் கடையில் ஈ மொய்க்காமல் இருக்க செந்தில் மருந்து அடிக்கும் காமெடி காட்சியை பதிவிட்டு கிண்டல் அடித்திருக்கிறார்.