Connect with us
TSV

Cinema News

யாரு விஜய்க்கு இப்படி தப்பான அட்வைஸ் பண்றாங்க? சுசித்ராவின் கிண்டல்… கொந்தளித்த ரசிகர்கள்!

விஜய், திரிஷாவுடன் இணைந்து சமீபத்தில் லிப்டில் போட்டோ எடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் இது வைரலானது.

அதே நேரம் கடும் சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது. சமீபத்தில் விஜய் பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். திரிஷாவும் வாழ்த்துகிறேன் என்று இப்படி ஒரு போட்டோவைப் பகிர்ந்து கடும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இதுகுறித்து பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா பேசியது தான் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. விஜய்க்கு இவர் எப்படி அட்வைஸ் பண்ணலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் விஜய், திரிஷாவை எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இப்படி பேசியுள்ளார்.

விஜய் அவரது குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேர வேண்டும். சின்ன சண்டைல பிரிஞ்சிருக்காங்க. அதுல பிரிஞ்ச குடும்பத்தை விஜய் இன்னும் சேர்த்து வைக்கல. அதனால ஒட்டுண்ணி நுழையுதுங்க என்று திரிஷாவைக் குத்திக் காட்டிப் பேசியுள்ளார்.

VT1

VT1

அதுமட்டுமல்லாமல் லிப்டுக்குள்ள கமுக்கமா எடுத்த போட்டோ அது. அப்படின்னா விஜயை திரிஷா எவ்வளவு சொந்தம் கொண்டாடுறாங்கன்னு தெரியுது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை இப்படித்தான் பலரும் சொன்னாங்க. எம்ஜிஆர்கிட்ட இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டு ஜெயலலிதா அவரையே ஒதுக்கிட்டாங்க.

இது கருணாநிதி தாத்தாவுக்கும் வருத்தம் தான். நண்பரை இப்படி பண்ணிட்டாங்களேன்னு அப்செட்டானாரு என்றும் சுசித்ரா தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா நிறைய விஷயங்கள் பண்ணினாங்க. ஆனா அப்படியே ‘ஈ அடிச்சான் காப்பி’ மாதிரி ஃபாலோ பண்ணக்கூடாது. விஜய் ஜெயிக்கறதுக்கு இது வழியல்ல. இதுவரைக்கும் விஜய் எந்த சமுதாயப் பொறுப்பையுமே வெளிப்படுத்தல. விஜய்க்கு யார் இப்படி எல்லாம் தப்பா அட்வைஸ் பண்றாங்கன்னு தெரியல. இப்படி பேசிருக்காங்க சுசித்ரா.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏன் ஒப்பிடுறாங்க என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய், மனைவி சங்கீதா, மகன், மகளை விட்டு பிரிந்து இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவித்து வருகிறதாம்.

அதே நேரம் சென்னையில் தனி வீட்டில் வசிப்பதாகவும், லண்டனில் சங்கீதா அவரது பெற்றோருடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு விஷயம் என்னன்னா விஜய் சமீபத்தில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினாராம். அதில் தான் திரிஷாவும் ஒரு வீடு வாங்கியுள்ளாராம்.

இதையும் படிங்க… தயாரிப்பாளரிடம் 3 மடங்கு அதிகமாக சம்பளம் கேட்ட விஜயகாந்த்!. அட அந்த படத்துக்கா?!…

தமிழக வெற்றிக்கழகம் என்று கட்சியைத் தொடங்கி உள்ள விஜய் இப்போது தான் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களைக் கௌரவித்து விருது வழங்கினார். அதுமட்டுமல்லாமல் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போகும் விஜய்க்கு இப்படி ஒரு விவகாரமா? எப்படி எதிர்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top