இதனாலதான் இந்தியன் 2 நடிக்க ஒத்துக்கிட்டேன்!… இப்படி சொல்லிட்டாரே உலக நாயகன்!..

Published on: July 1, 2024
indian
---Advertisement---

ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹசன் நடித்து வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகம் 1996ம் வருடம் வெளியானது. ஊழல், லஞ்சத்திற்கு எதிராக சுதந்திர போராட்ட தியாகி களமிறங்கி களை எடுப்பதுதான் இப்படத்தின் கதை. தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடி வரும் நிலையில் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கமலுடன் கஸ்தூரி, கவுண்டமணி, ஊர்மிளா, சுகன்யா, மனிஷா கொய்ராலா, நெடுமுடி வேணு என பலரும் நடித்திருந்தனர். கமல் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 படத்தை கையில் எடுத்தார் ஷங்கர்.

Indian 2
Indian 2

லைக்கா நிறுவனம் தயாரிக்க முன் வந்து படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. லைக்கா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்க படம் டிராப் ஆகும் நிலைக்கும் சென்றது. அப்போதுதான் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் லைக்காவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தது.,

தற்போது ஒருவழியாக படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் என பலரும் நடித்திருக்கிறார்கள். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் ஆகியோர் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

kamal

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகியிருக்கிறது. எனவே, எல்லா இடத்துக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறார் கமல்ஹாசன். நேற்று கூட சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல் ‘நான் இந்தியன் 2வில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே இப்படத்தின் 3ம் பாகம்தான். 3ம் பாகத்தின் பெரிய ரசிகன் நான்.

என்னுடைய இரண்டாம் பாகம் இந்தியன் 3-தான். அந்த படத்திற்காக மனதுக்குள்ளேயே கை தட்டி கொண்டிருக்கிறேன். அந்த சினிமாவின் ரசிகன் நான். அது இன்னும் 6 மாதம் இருக்கேன்னு எனக்கு பதட்டமா இருக்கு. விரைவில் இந்தியன் 3 படம் ரிலீஸ் தேதி வெளியாகும்’ என பேசினார். இந்தியன் 3 படத்தில் இந்தியன் தாத்தா அதாவது சேனாதிபதியின் அப்பா வேடத்தில் கமல் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.