ஷாலினிக்கு ஆபரேஷன்!.. அஜர்பைசானில் அஜித்!.. விடாமுயற்சிக்காக வேலை பார்க்கும் ஏ.கே!..

Published on: July 2, 2024
shalini
---Advertisement---

Ajith Shalini: கோலிவுட்டில் ஒரு நட்சத்திர தம்பதிகளாக பல வருடங்களாக தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. அமர்க்களம் திரைப்படத்தின் போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்து அதன் பிறகு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இருவருக்கும் ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் .

திருமணம் ஆனதிலிருந்து ஷாலினி சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். குடும்பம் குழந்தைகள் என ஒரு பொறுப்புள்ள மனைவியாக குடும்பத் தலைவியாக இருந்து வருகிறார் ஷாலினி. இன்னொரு பக்கம் அஜித் அவருடைய கெரியரில் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: அரண்மனை 4, மகாராஜா ரெண்டுமே 100 கோடி வசூல் பண்ணல!.. மனசாட்சியோடு உருட்டுங்கப்பா!..

இன்று தான் அஜர்பைதானில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார் அஜித். அது சம்பந்தமான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் அஜித் நேற்று சென்னைக்கு வர வேண்டியதாம். காரணம் ஷாலினிக்கு ஏதோ அவர் உடலில் பிரச்சனை இருக்க அதற்காக ஆபரேஷன் நேற்றுதான் நடந்து முடிந்ததாம்.

இதே வேறொரு நடிகரோ அல்லது சாதாரண மனிதராகவோ இருந்திருந்தால் தன் மனைவிக்கோ குழந்தைக்கோ ஏதாவது பிரச்சனை என்றால் மற்ற வேலைகளை அப்படியே விட்டுவிட்டு தன் குடும்பத்திற்காக அவர்களுடனே தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் அஜித்தை பொருத்தவரைக்கும் காதல் மனைவியாக இருந்தாலும் இந்த பக்கம் நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்பொழுதுதான் விடாமுயற்சி படப்பிடிப்பில் சூடு பிடித்திருக்கிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து 10 மணி நேரம் விஜயால் எப்படி நிற்க முடிந்தது? காரணத்தை சொன்ன தயாரிப்பாளர்

தன்னால் மீண்டும் அந்த படத்திற்கு ஒரு தடை வரக்கூடாது என்பதற்காக ஆபரேஷனாக இருந்தாலும் சரி என நினைத்து ஷூட்டிங்கிலேயே தான் கலந்து கொண்டாராம் அஜித். நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பி தன் மனைவியை பார்க்க வந்திருக்கிறார் அஜித்.

என்னதான் பல விமர்சனங்கள் அஜித் மீது முன் வைக்கப்பட்டாலும் தயாரிப்பாளருக்கோ அல்லது படத்திற்கோ தன்னால் எந்த பிரச்சினையும் வரக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் அஜித்.

இதையும் படிங்க: எஸ்.ஏ.சி மட்டும் இல்லைனா விளக்குதான் புடிச்சிருப்பாரு விஜய்! என்ன யோக்கியம் இருக்கு? கோபத்தை கக்கிய பிரபலம்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.