போன வேகத்தில் திரும்பி வந்த அஜித்!.. விடாமுயற்சி என்னாச்சி?!.. பரபர அப்டேட்!..

Published on: July 2, 2024
ajith
---Advertisement---

துணிவு படத்திற்கு பின் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், சரியாக கதை அமையாமல் படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிக்கொண்டே போனது. ஒருவழியாக இந்த வரும் பிப்ரவரி மாதம் அசர்பைசான் நாட்டில் படப்பிடிப்பு துவங்கியது.

அஜித் தனது மனைவி திரிஷாவுடன் அங்கு வாழ்ந்து வருவது போலவும் வில்லர் அர்ஜூன் கும்பல் அவரை கடத்தி சென்றுவிடுவது போலவும், அஜித் தனது மனைவியை கண்டுபிடிப்பது போலவும் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், படப்பிடிப்பு துவங்கி 6 மாதம் ஆகியும் படம் முடிந்த பாடில்லை.

இதையும் படிங்க: இந்த ரேஞ்சில போனா சூரி வேறலெவல்!.. ஆச்சர்யப்படும் திரையுலகம்!.. விஷயம் இதுதான்!..

இதற்கு முக்கிய காரணம் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதுதான். ஏனெனில் ஒரே நேரத்தில் விடாமுயற்சி, இந்தியன் 2, வேட்டையன் என பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்ததுதான் காரணம். எனவே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திற்கு நடிக்கப்போனார் அஜித்.

அந்த படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு லைக்காவுக்கு கெடு கொடுத்தார். விடாமுயற்சி படத்தை மீண்டும் துவங்கவில்லை எனில் நான் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டுதான் விடாமுயற்சி படத்திற்கு வருவேன் என அவர் சொன்னதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு அசர்பைசான் நாட்டில் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது. அஜித்தும் கலந்து கொண்டார்.

shalini
shalini

இந்நிலையில்தான், அவரின் மனைவி ஷாலினிக்கு சென்னையில் இன்று ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. இதுபற்றி ஏற்கனவே மருத்துவர்களிடம் பேசியிருந்த அஜித் விடாமுயற்சி படத்துக்காக அசர்பைசான் நாட்டிலேயே இருந்தார். அங்கிருந்து மருத்துவர்களிடம் மனைவி ஷாலினியின் உடல்நிலை பற்றி விசாரித்து வந்தார் என செய்திகள் வெளியானது.

ஆனால், அவர் ஷாலினியை பார்ப்பதற்காக சென்னை திரும்பிவிட்டார் என்பதே உண்மை. விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கி, வேகமாக காரில் ஏறி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மனைவியுடன் 2 நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் அஜித் அசர்பைசான் நாட்டுக்கு போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.