சிறுமிகள் ஆபாச படத்தை கல்லூரி மாணவிகளிடம் காட்டிய 72 வயது முதியவர் கைது!

Published On: December 24, 2019
---Advertisement---

bb69cfef5340aebe6788f2d8e8b7c542

குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பதும், டவுன்லோட் செய்வதும் சட்டப்படி குற்றம் என்றும் அந்த தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்றும் பெண்கள் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி ரவி அவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது தெரிந்ததே

மேலும் தமிழகத்தில் ஆபாச படங்கள் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் சென்னையில் சிறுமிகளின் ஆபாச படத்தை பார்த்தது மட்டுமின்றி பலருக்கு பகிர்ந்ததாகவும், அதுமட்டுமின்றி தன்னுடைய வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவிகளிடம் அந்த படங்களை பார்க்கும்படி கட்டாயப்படுத்தியதாவுகம் 72 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் மோகன் என்ற 72 வயது முதியவர் மீது தற்போது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Comment