சமீப காலமாக ரஜினி நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் எப்பேர்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். பக்கா ஆக்சன் படமாக அமைந்த ஜெயிலர் படத்தில் ரஜினியின் மாஸ் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு அவர் கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.
அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே த.ச.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்திலும் ரஜினி நடித்து வந்தார். இப்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் .
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கின்றது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. கமலை வைத்து லோகேஷ் விக்ரம் என மிகப் பெரிய ஒரு வெற்றி படத்தை கொடுத்த நிலையில் ரஜினிக்கும் அதே அளவு ஒரு வெற்றியை கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள் .
சமீப காலமாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே ஒரு பான் இந்தியா படமாகவே மாறி வருகின்றன. அதற்கு ஏற்ப பிற மொழிகளில் சூப்பர் ஸ்டார்கள் ஆக இருக்கும் பல நடிகர்களை நடிக்க வைத்து அதன் மூலம் வியாபாரத்தை தேடி கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த கூலி திரைப்படத்திலும் பாலிவுட் , டோலிவுட் என பிற மொழிகளில் இருந்து நடிகர்களை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கூலி படத்தில் முதலில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது .ஆனால் அவர் இல்லை என உறுதியாக விட்டது .இதற்கிடையில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் இந்தப் படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்ததாகவும் ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும் ஒரு செய்தி வெளியானது.
cஆனால் இப்போது இந்த படத்தில் ரன்வீர் நடிப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அவர் அறிமுகம் ஆகும் திரைப்படம் கூலி திரைப்படமாக தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
