விஜயகாந்தை மீண்டும் திரையில் பார்க்க முடியுமா?!.. இப்படி சொல்லிட்டாரே பிரேமலதா!. இது விஜய்க்கு செக்கா?!…

Published on: July 17, 2024
---Advertisement---

எல்லோருக்கும் பிடித்தமான மனிதராகவும், நடிகராகவும் இருந்தவர் விஜயகாந்த். பலருக்கும் உதவி செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் அவர். பசியோடு இருந்த பலருக்கும் உணவளித்தவர் அவர். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. தன்னை யருமே தவறாக விமர்சனம் செய்யாதபடி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் விஜயகாந்த்.

அவரின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். வீட்டின் மீது இருந்தும், பாலத்தின் மீது இருந்தும் அவரின் உடல் மீது மலர்களை பலரும் தூவினார்கள். அவரின் உடலுக்கு அரசு மரியாதையும் கொடுக்கப்பட்டது. விஜயகாந்த் சுலபமாக சினிமாவில் நுழைந்துவிடவில்லை.

பல அவமானங்களை சந்தித்துவிட்டுதான் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார். துவக்கத்தில் பல படங்கள் ஓடவில்லை. அதன்பின் வெற்றிகளை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். எம்.ஜி.ஆரை போல துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகவே காட்டிக்கொண்டார்.

தற்போது அவர் இல்லாத நிலையில் ஏ.ஐ என சொல்லப்படும் தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை தங்களின் படங்களில் சிலர் பயன்படுத்த ஆசைப்படுகிறார்கள். விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் ஆகிய 2 படங்களிலும் விஜயகாந்தை அப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான், முன் அனுமதியின்றி விஜயகாந்தை ஏ.ஐ மூலம் யாரும் பயன்படுத்தக்கூடாது என விஜயகாந்த் பிரேமலதா அறிவித்திருக்கிறார். இதுவரை யாருமே தங்களிடம் அனுமதி பெறவில்லை எனவும் அவர் சொல்லி இருக்கிறார். பிரேமலதாவிடம் வெங்கட்பிரபு அனுமதி வாங்கினார் என முன்பு சொல்லப்பட்டது.

ஆனால், இப்போது அவர் ‘ஏ.ஐ மூலம் கேப்டனை திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாரும் அனுமதி பெறவில்லை’ என சொல்லி இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி வெங்கட்பிரபுவும், விஜய் ஆண்டனியும் விரைவில் விளக்கம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment